Pondicherry

News May 7, 2024

புதுச்சேரியில் சென்டாக் சேர்க்கைக்கு தேதி அறிவிப்பு

image

புதுச்சேரி அரசு, தனியார் கல்லூரிகளில் நீட் அல்லாத பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு அரசின் சென்டாக் அமைப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2024-25 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் சென்டாக் இணையதளமான (www.centacpuducherry.in) ல் விண்ணப்பத்தை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். கடைசி நாள் வருகிற 22 ந்தேதி என அறிவித்தது.

News May 7, 2024

புதுச்சேரி: +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை

image

நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஆதேஷ். விடுமுறைக்காக கிருமாம்பாக்கம் பனித்திட்டு சுனாமி குடியிருப்பில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். +2 தேர்வில் ஆதேஷ் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் அறையில் இருந்த ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.

News May 7, 2024

புதுச்சேரி முதல்வருக்கு சபாநாயகர் வாழ்த்து

image

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்று 4 ஆம் ஆண்டு துவக்க நாளில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

News May 7, 2024

பாண்டிச்சேரி பாறை கடற்கரை சிறப்புகள்!

image

பாண்டிச்சேரியிலுள்ள அழகிய ராக் பீச் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இந்த கடற்கரையில் நடைபயிற்சி செய்யவும் கடலின் அழகை ரசிக்கவும் சிறந்த இடமாகும். மற்ற கடற்கரை போன்று மணல் கரைகள் இருக்காது. இதில் கரை முழுவதும் பாறைகள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தூய்மையான கடற்கரையில் இதுவும் ஒன்றாகும். இங்கு, 1.2 கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலம் கடலினுள் செல்லும் விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

புதுவையில் நாளை குடிநீர் சப்ளை ரத்து

image

ஒட்டம்பாளையத்தில் உள்ள கொம்பாக்கம் நீர்த்தேக்க தொட்டி கழுவும் பணிகள் நாளை நடக்கிறது.எனவே நாளை (ஏப்ரல்.8) மதியம் 12-2 கொம்பாக்கம், பாப்பாஞ்சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், அதேபோல் முதலியார்பேட்டை, தேங்காய்த்திட்டு நீர்த்தேக்க தொட்டியை கழுவும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் (ஏப்ரல்.9)மதியம் 12 – 2 வரை தேங்காய்த்திட்டு அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் குடிநீர் வினியோகம் தடைபடும்.

News May 7, 2024

மாணவிகளுக்கு படகு இயக்க பயிற்சி

image

புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து காரைக்கால் வரை தேசிய மாணவர் படையை (என்.சி.சி.) சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் சாகச பயணம் மேற்கொள்கின்றனர். இந்த சாகச பயணம் அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி லெப்டினன்ட் கமாண்டர் லோகேஷ் தலைமையில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் படகை இயக்குவது குறித்து அவர்களுக்கு என்.சி.சி. அலுவலர்கள் நேற்று பயிற்சி அளித்தனர்.

News May 7, 2024

புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

image

ஒதியம்பட்டு சேர்ந்த ஜெயபால் – சோகத்த பச்சையம்மாள் தம்பதியினரின் மகள் மேனகா. இவர் மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +2 பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில், நேற்று வெளியான தேர்வு முடிவில் மேனகா குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலிசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 6, 2024

கோட்டுச்சேரி குளத்தில் மீன்கள் திருடிய 3 பேர் கைது

image

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி சேர்ந்தவர் ஞானவடிவேல். இவர் கோட்டுச்சேரி பகுதியில் தனக்கு சொந்தமான குளத்தில் மீன் வளர்த்து அதை விற்று தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 பேர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்துள்ளனர். அப்பொழுது, ஞானவடிவேல் 3 பேரையும் பிடித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 6, 2024

புதுச்சேரி : +2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு

image

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 6566 மாணவர்களும் 7446 மாணவிகளும் ஆக மொத்தம் 14012 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி 5867 மாணவர்களும் 7081 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 92.41 சதவீத மாண்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

புதுச்சேரி கடற்கரையில் தவிக்கும் சுற்றுலா பயணிகள்!

image

புதுச்சேரிக்கு பொது விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடற்கரைக்கு வருவோருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கழிப்பிடங்கள்தான்.கலவைக் கல்லூரி அருகே அமைக்கப்பட்ட ‘பயோ டாய்லெட்கள்’ செயலிழந்துவிட்டன. மக்கள் வருகைக்கு ஏற்ப கழிப்பிட வசதி ஏற்படுத்துவது மிக அவசியம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!