India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்காலில், இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளியின் தேர்ச்சி சதவீதம் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளியில் 81.72% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 75.61% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 87.43 % தேர்ச்சி அடைந்துள்ளனர். காரைக்கால் அரசு பள்ளியில் 65.42 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 56.89 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 73.89 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் 91.28 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.67 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.01 % தேர்ச்சி அடைந்துள்ளனர். காரைக்காலில் 78.20 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 71.90 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 84.35 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுவையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 229 பள்ளிகளைச் சோ்ந்த 12, 613 மாணவ, மாணவிகளும், 599 தனித் தோ்வா்களும் எழுதியுள்ளனா் . காரைக்கால் பிராந்தியத்தில் 60 பள்ளிகளைச் சோ்ந்த 2, 479 மாணவ, மாணவிகளும், 259 தனித் தோ்வா்களும் என மொத்தம் 2, 738 பேரும் எழுதியுள்ளனா் . தோ்வு முடிவுகள் இன்று (மே 10) காலை 9.30 மணிக்கு கல்வித் துறை இணையத்தில்
வெளியிடப்படுகிறது
புதுவையில் நீட் அல்லாத பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கடந்த 8-ஆம் தேதி முதல் சென்டாக் இணையதளம் மூலம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனா். அதனடிப்படையில், 9, 993 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வருகிற 22-ஆம் தேதி வரையில் பெறப்படவுள்ளன . வருகிற ஜூன் 5-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரெஞ்சு இரண்டாவது உலக யுத்தம் முடிந்த நினைவு தினம் புதுவை ரேவாய் சோசியல் கட்டடத்தில் நேற்று நடந்தது. பிரெஞ்சு அமைப்பின் தலைவர் துபாய் குழந்தை தலைமையில்
பாக் பிரெஞ்சு அமைப்பின் துணைத் தலைவர் அந்துவான் அந்தோணி முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களாக அல்லியன்ஸ் பிரான்சிஸ் தலைவர் நல்லான் சதீஷ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறந்த சமூக சேவை விருதை ஆதவனுக்கு வழங்கினர்.
காரைக்கால் அடுத்த நெடுங்காடு குறும்பகரத்தில் வசித்து வந்தவர் குஞ்சிதபாதம் (81). இவர் பாஜக பிரமுகரான இவர் நேற்று மரணமடைந்தார். இதனை அடுத்து மரணமடைந்த குஞ்சிதபாதம் உடல் அவர் விருப்பப்படி மாணவர்களின் மருத்துவ ஆராய்ச்சிக்காக அவரது உடலை தனியார் மருத்துவக்கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை தனியார் மருத்துவக் கல்லூரி ஆம்புலன்ஸ் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
புதுவையில் தேசிய கல்விக்கொள்கையை அவசர கதியில் பல்கலைக்கழகமும், கல்வித்துறையும் இணைந்து மாணவர்கள் மத்தியில் திணிக்கப்பதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மாணவர் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவின் விசாரணையில் புதுவையில், தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தியது தொடர்பாக அரசு பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாட்டில் இப்போது 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 3 கட்ட தேர்தலிலும் மோடி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை கூறி வருகின்றார். அவர் 10 ஆண்டுகால ஆட்சியின் பட்டியலை சொல்ல முடியாமல் குழம்பிப்போய் மோடி தடம் புரண்டு இருப்பது தெளிவாக தெரிகின்றது என நாராயணசாமி விமர்சனம் செய்தார்.
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களான, பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள் இவற்றின் தர நிலையை மதிப்பீடு செய்து, அந்நிறுவனங்களுக்கு அறிவிக்கும் தேசிய தரமதிப்பீடு & அங்கீகார குழுவினர்கள் புதுவையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள், லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரியில் இன்றும், நாளை 10ம் தேதி ஆகிய 2 நாட்கள் கல்லுாரி உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் கல்வி கற்கும் சூழல் பற்றி ஆய்வு மேற்கொள்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.