India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி ஜாலி பிரிண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் முதலாம் ஆண்டு கோடை பயிற்சி முகாம் நிறைவு விழா இந்திரா நகர் பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி அரசு கொறடாவும் இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் கலந்துகொண்டு பயிற்சி முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
புதுவை, காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குதல் இன்று தொடங்கியது. 24ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களின் தகுதிபட்டியல், நேர்காணலுக்கான தேதி அந்தந்த அரசு மேல்நிலை பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். 31 ஆம் தேதி மதிப்பெண் இடஒதுக்கீடு முறையில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் இடம் வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கல்யாணசுந்தரம் தோட்டத்தில் விளையும் பலாப்பழங்களை சட்டசபையில் உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று அவர் சட்டசபையில் வழங்கினார். முன்னதாக அவர் முதலமைச்சர் அறையில் சென்று முதலமைச்சருக்கு பலா பழங்களை வழங்கினார்.
புதுச்சேரியில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
இன்று காலை 10:00மணி முதல் மாலை 3 மணி வரை கீழ்காணும் இடங்களிலும் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் முருங்கப்பாக்கம் அன்னை தெரேசா நகர் அரவிந்தன் நகர் ரங்கசாமி நகர், நயனார் மண்டபம் சுதனா நகர் சில பகுதி நகர் கிழக்கு வாசல்நகர் கணபதி நகர்
மகாலட்சுமி நகர் அரியாங்குப்பம் நோணாங்குப்பம் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்
புதுவையை சேர்ந்த சரவணன்குமாரிடம் மர்ம நபர் ஒருவர், வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கலாம் எனக்கூறி அவரிடமிருந்து ரூ.36 ஆயிரம், சூரியாவிடம் ரூ. 71 ஆயிரம், சுதாவிடம் ரூ.15 ஆயிரம் , கீர்த்தி வர்மனிடமிருந்து ரூ. 18 ஆயிரம், ஐயப்பனிடமிருந்து ரூ.10 ஆயிரம், கதிரவனிடமிருந்து ரூ.10 ஆயிரத்தை பெற்று ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
புதுவை
செயின்ட் தெரஸ் வீதியில் உள்ள அரங்க ராமானுஜர் பஜனை மடம் ஸ்ரீதேவி பூதேவி சமேத அனந்தரங்க நாதர் சன்னதியில் ராமானுஜரின் 1007வது அவதார திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் கோலாகலமாக நடந்தது.
ராமானுஜரின் உருவச்சிலை உள்புறப்பாடு செய்யப்பட்டு காலை 11 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்கும் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் செவிலியர்கள். இந்த நாளில் மற்றவர்கள் சுகாதாரமாக, நலமாக வாழ, அர்ப்பணிப்புடன் கூடிய சேவையையும் கடின உழைப்பையும் நல்கும் செவிலியர் அனைவருக்கும் செவிலியர் தின நல்வாழ்த்துக்களை புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
கர்நாடகாவில் இருந்து புறப்படும் ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை புதுச்சேரிக்கு வருகிற 19ம் தேதி இரவு வருகை தர உள்ளது. அந்த ஜோதி யாத்திரையை வரவேற்பது தொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி.யுடன் புதுச்சேரி மாநில ஐஎன்டியூசி தலைவர் ஜி.ஆர். பாலாஜி நேற்று ஆலோசனை நடத்தினார்
Sorry, no posts matched your criteria.