Pondicherry

News May 27, 2024

புதுச்சேரி: பள்ளிகள் திறப்பால் அலைமோதிய கூட்டம்!

image

புதுவை நகரின் மிக முக்கிய வீதியான காந்தி வீதி, நேரு வீதியில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது. இங்கு
குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைப்பதால்,
தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் உள்ளூர் & வெளியூர் பகுதியில் குழந்தைகளுக்கு பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று(மே 26) மக்கள் குவிந்ததால் மார்கெட்டில் கூட்டம் அலைமோதியது.

News May 27, 2024

புதுச்சேரி: திட்டமிட்டபடி ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு!

image

புதுச்சேரியில் திட்டமிட்டபடி ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் அமலாகவுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் பாடநூல், நோட்டுகள், சீருடை மற்றும் தையற்கூலியும் வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் சீருடை நிறத்தில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 27, 2024

புதுச்சேரி: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது!

image

ஒடிசா மாநிலம் பாலசோரை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் புதுச்சேரி திருபுவனை தொழில்பேட்டை அருகே கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை நேற்று(மே 26) விற்பனை செய்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ரூபாய் 7000 மதிப்புள்ள 50 கிராம் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு அவரை திருபுவனை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

News May 26, 2024

புதுச்சேரி: இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

image

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ரெமல் புயலாக வலுப்பெற்ற நிலையில் பல்வேறு துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறை முகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் தங்களது படங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 26, 2024

புதுவை: 27 பேர் பலி – ஆளுநர் இரங்கல்

image

ராஜ்கோட் விளையாட்டு திடலில் நேற்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியும், டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

News May 25, 2024

புதுச்சேரி: புல் போதையில் ரகளை

image

புதுச்சேரிக்கு வார இறுதி விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் போலீசார் பழைய துறைமுக பகுதியில் அதிரடி ஆய்வினை மேற்கொண்டனர். அங்கு குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளையும் மதுபாட்டில்களை பாறையில் வீசி உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளவர்களை விரட்டியடித்தனர். பின்னர் எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியேற்றினர்.

News May 25, 2024

நடிகருக்கு புதுவை மாணவர் தந்த அன்பளிப்பு!

image

சேலியமேடு கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படிக்கும் மாணவர் ஜெகதீஷ். கல்லூரியில் படித்து கொண்டே பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஜெகதீஷின் வறுமையை அறிந்து அவருக்கு, விஜ்ய் டிவி புகழ் நடிகர் பாலா பைக் வாங்கி கொடுத்தார்.  இந்நிலையில் இந்த நிகழ்வை பொம்மையாக வடிவமைத்து வில்லியனூர் ஆச்சாரியா கல்லூரி விழாவிற்கு இன்று(மே 25) வந்த பாலாவுக்கு மாணவன் ஜெகதீஷ் கொடுத்துள்ளார்.

News May 25, 2024

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

image

புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் முதல்வர் நாராயணசாமி
2024 காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி வந்தால் மூன்று மாதத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என கூறியுள்ளோம். அதன்படி இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்த 3 மாதங்களில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

News May 25, 2024

புதுச்சேரி: பிளஸ் 1 சோ்க்கை தகுதி பட்டியல் வெளியீடு

image

புதுச்சேரி அரசு பள்ளிகளில் படித்த 10ம் வகுப்பு மாணவா்களின் தகுதிப் பட்டியல் மற்றும் நோ்காணலுக்கான தேதி, நேரம் அந்தந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.
புதுச்சேரி நகரில் திருவள்ளுவா் பெண்கள் பள்ளி, வ.உ.சி. பள்ளி, ஜீவானந்தம் பள்ளி, அன்னை சிவகாமி பள்ளி, கதிா்காமம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
உள்ளிட்ட பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை தகுதி பட்டியல் ஒட்டப்பட்டது.

News May 25, 2024

புதுவையில் கோழி இறைச்சி கழிவுகள் அகற்றம்

image

புதுவை மடுகரை & அதைச்சுற்றியுள்ள பகுதியில் இறைச்சி கடைகள் வைத்திருப்போர் இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகளை சாலை ஓரங்களில் வீசிவிட்டு செல்வதால்
தூர்நாற்றம் வீசுகிறது. இதையடுத்து நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் நேற்று குப்பை அகற்றும் ஊழியர்களை கொண்டு இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்தினர். பொது இடங்களில் இறைச்சி கழிவு கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

error: Content is protected !!