Pondicherry

News May 28, 2024

முதல்வரின் அம்பாசிடர் காரில் கவர்னர் பயணம்

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 1997 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் வாங்கிய அம்பாசிடர் கார் பழுதடைந்து இருந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் முதல்வரின் கார் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது.  இன்று தனது அம்பாசிடர் காரில் துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் ஆளுநர் மாளிகையில் இருந்து நகரப் பகுதியில் பயணம் மேற்கொண்டனர்.

News May 28, 2024

எம்.டெக் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

image

காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 7 வகையான எம்.டெக்., படிப்புகள் உள்ளது. இந்த படிப்புகளில் சேர ‘கேட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பங்களை https://pondiuni.edu.in/admissions-2024-25 என்ற இணையதள முகவரி மூலம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 9ஆம் தேதி ஆகும். இந்த தகவலை புதுவை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

News May 27, 2024

புதுச்சேரி மகாத்மா காந்தி சிலை பற்றிய குறிப்பு!

image

புதுச்சேரியில் ப்ரோமனேட் கடற்கரையில், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை 1866 நிறுவப்பட்டுள்ளது. புதுச்சேரியின் முக்கிய சின்னமாக இது ராய் சவுத்ரி என்ற பிரபல சிற்பியால் இந்த சிலை கட்டப்பட்டது. இந்த காந்தி சிலை 4மீ உயரம் கொண்டது. இந்த சிலைக்கு சற்று கீழே, செஞ்சி வரை செல்லும் ஒரு சுரங்கப்பாதை உள்ளது. ஆனால் இந்த சுரங்கப்பாதை பாதுகாப்புக் கருதி மூட்டப்பட்டுள்ளது.

News May 27, 2024

புதுச்சேரி: சிபிஎஸ்இ பாடத்திட்டம் முழுமையாக அமல்

image

சிபிஎஸ்இ பாடத்திட்டம் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் முழுமையாக அமலாகிறது. சீருடையில் மாற்றமில்லை. தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர பாடத்திட்டமும் அமலில் இருந்தது. தற்போது நான்கு பிராந்தியங்களிலும் பிளஸ் 2 வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

News May 27, 2024

இலங்கையில் புதுவை சபாநாயகர் சுவாமி தரிசனம்

image

இலங்கை நாட்டிற்கு சென்றுள்ள புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம், இன்று இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலயம் மற்றும் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பொன்னம்பல வான சுவாமிகள் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பொன்னம்பல வான சுவாமிகள் ஆலயத்தில் இந்து மத குருமார் தலைவர் சுவாமி சிவாச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்றார்.

News May 27, 2024

புதுச்சேரி அரசு சார்பில் நேருவின் நினைவு நாள்

image

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60 வது நினைவு தினம் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், அமைச்சர் ஜெயகுமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

News May 27, 2024

புதுவையில் மாநில திமுக செயற்குழுக் கூட்டம்

image

புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில கழக அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை வகித்தார். இதில், புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தீர்மானங்களை விளக்கி சிறப்புரை ஆற்றினார். இந்த செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News May 27, 2024

சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

image

காரைக்கால் கோவில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துணை இயக்குநர் மேல்நிலைக்கல்வி ராஜேஸ்வரி தலைமையில் 27ஆம் தேதி நடைபெற்றது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வருகை தந்து தேவையான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தனர். இதன் தரவரிசை பட்டியல் மற்றும் காலியிடங்கள் நாளை வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

News May 27, 2024

பள்ளி திறப்பு: புதுச்சேரியில் தயார் நிலை!

image

புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் முதல் வாரத்தில் மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்க இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து கூறிய அதிகாரிகள், புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 77 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பெங்களூருவில் இருந்து 7.50 லட்சம் பாடப் புத்தகங்களும், தமிழகத்திலிருந்து 12 ஆயிரம் தமிழ் பாடப் புத்தகங்களும் வாங்கப்பட்டுள்ளதாக கூறினர்.

News May 27, 2024

புதுச்சேரி அருகே ரூ.16.25 லட்சம் ஆன்லைன் மோசடி!

image

புதுச்சேரி அம்பாள் நகரை சேர்ந்தவர் தாட்சாயிணி. இவர் பொருட்கள் வாங்க ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ.16 லட்சத்து 37 ஆயிரத்து 665 ஆன்லைன் மூலமாக செலுத்தியுள்ளார். ஆனால் அவர் அனுப்பிவைத்த தொகை தங்களது நிறுவன கணக்கிற்கு வரவில்லை என நேற்று முன்தினம்(மே 25) தெரிவித்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!