Pondicherry

News June 1, 2024

பாதுகாப்புப் பணியில் 800 போலீஸாா்

image

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் மாநில போலீஸாா், மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் உள்ளூா் போலீஸாா் என 3 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில், மொத்தம் 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா் என்று SSP நாராசைதன்யா தெரிவித்தார்

News May 31, 2024

புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு

image

புதுச்சேரியில் வருகின்ற ஜூன் 4ம் தேதி ஐந்து வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப்படை, 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை நாளன்று புதுச்சேரியில் உள்ள பிராந்தி கடை, சாராயக்கடை ,கல்லு கடை மற்றும் அனைத்து வகை மதுக் கடைகளையும் மூட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

News May 31, 2024

புதுச்சேரியில் 6 பேரிடம் 3.30 லட்சம் ரூபாய் மோசடி

image

புதுவை வில்லியனூர் நடராஜனிடம் மர்ம நபர், பங்கு சந்தையில் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறி
ரூ2.40 லட்சம்,
தட்டாஞ்சாவடி சீனிவாஸிடம் ரூ.18 ஆயிரம், உழவர்கரை சோனியாவிடம் ரூ10 ஆயிரம் புதுவை சந்தோஷிடம் ரூ 8ஆயிரம், புதுவை பாலாஜியிடம் ரூ 40 ஆயிரம் புதுவை சங்கரனிடம் ரூ 14 ஆயிரம் பெற்று ஏமாற்றி
உள்ளார். இது குறித்து புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News May 31, 2024

காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய படிப்புகளுக்கு விண்ணப்பம்

image

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் கலைக் கல்லுாரி வளாகத்தில் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் எம்.ஏ.எம்.எஸ்சி. எம்.காம். உள்ளிட்ட 16 முதுநிலை பட்டப் படிப்புகள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று 31ம் தேதி முதல் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. www.kmcpgs.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

News May 31, 2024

புதுவையில் மீண்டும் விமான சேவை

image

இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி விமான அதிகாரிகள் இடையே காணொலி மூலம் நேற்று நடத்திய கூட்டத்தில், புதுச்சேரி விமான சேவையை அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கி கொள்வதாகவும், புதுச்சேரி விமான நிலைய வளாகத்தில் இரண்டு அலுவலக அறை மற்றும் விமான பராமரிப்பதற்கான பணிமணைக்கான இடம் ஆகியவை வேண்டும் என இண்டிகோ அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

News May 31, 2024

கோவில் சொத்து அபகரிப்பை தடுக்கனும்

image

புதுவை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்து போலி ஆவணம் தயாரித்து அபரிக்கப்பட்டது.  இந்நிலையில் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சொத்து அபரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதில் துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.

News May 30, 2024

பெண்களை அவதூறாக பேசி யூடியூப்பில் பதிவு செய்தவர் கைது

image

புதுச்சேரி பெண் மற்றும் பல்வேறு மாநிலத்தைச் சார்ந்த பெண்களை பற்றி அவதூறாக பேசி அவருடைய youtube சேனலில் பதிவிட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த பி கே விஜய் என்கிற துர்க்கைராஜ் YouTuber இன்று புதுச்சேரி இணையவழி போலீசார் இன்று கைது செய்து மாலை 7 மணி அளவில் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்பு சிறையில் அடைத்தனர்.

News May 30, 2024

புதுச்சேரியில் ஜூன்.12ல் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

image

புதுச்சேரியில் ஜூன்.12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால், ஏனாம், மாஹே உள்ளிட்ட பகுதிகளிலும் ஜூன்.12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன்.6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெப்பச்சலனம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

News May 30, 2024

புதுச்சேரியில் குறும்படத் திருவிழா

image

புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் பாண்டிச்சேரி அலையன்ஸ் ஃபிரான்சிஸ் ஆகியவை இணைந்து ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் 2 நாள் சிறாா் குறும்பட திருவிழாவை நடத்த உள்ளன. புதுச்சேரி அலையன்ஸ் ஃபிரான்சிஸ் கலையரங்கத்தில் 13 வயது முதல் 18 வயதுள்ள சிறுவா்களுக்கான குறும்படம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திரையிடப்படும். இதற்கு அனுமதி இலவசம்.

News May 30, 2024

புதுச்சேரி பாரதி பூங்கா சிறப்புகள்!

image

பழைய பாண்டிச்சேரி நகரின் மையத்தில் உள்ள பாரதி பூங்கா, ராஜ்பவனுக்கு எதிரே அமைந்துள்ளது. மேலும் இதில் புதுச்சேரியின் நினைவுச்சின்னமான ஆயி மண்டபம் அமைந்துள்ளது. இது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயி என்ற வேசி, குளம் வெட்டி குடிநீர்ப் பஞ்சம் தீர்த்ததன் நினைவாக இது கட்டப்பட்டது. இந்த நகரின் மத்தியில் பாரதி பூங்காவில் பசுமையான மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது.

error: Content is protected !!