India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை சென்டாக் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருவாய்த்துறை சார்பில் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியாதவர்கள் தங்களது பழைய சான்றிதழ்களை இணைத்து நாளைக்குள் விண்ணப்பத்தை நிறைவு செய்யவேண்டும். மேலும் விவரங்களை சென்டாக் இணையதளத்திலும் (www.centacpuducherry.in), உதவி எண் 0413-2655570 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீட்’ சார்ந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கடந்த ஆண்டு கட்-ஆப் மதிப் பெண்கள் சென்டாக் இணையதளத்தில் உள்ளன. கலந்தாய்வு குறித்த அட்டவணையின் முழு விவரங்கள் அடங்கிய தகவல் கையேடு அரசு ஒப்புதல் அளித்த பின்னர் சென்டாக் இணையதளத்தில் மாணவர்களுக்கான அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மூன்றாவது முறையாக பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்கவுள்ளார். விழாவில் பங்கேற்க புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், பதவி ஏற்கும் விழாவை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார்.
புதுச்சேரியில் மகாகவி பாரதியாா், பாரதிதாசன் இல்ல இரு அருங்காட்சியகங்களையும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள
புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவரும், அவரது பெயரனுமான கோ.பாரதி துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் அமைச்சர்கள் அரசு செயலர்கள் ஆகியோருக்கு
நன்றியை தெரிவித்துள்ளாா்.
புதுவை அரசு ஊழியர்களுக்கான பல்வேறு படிகள் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி கடந்த ஏப்ரல் மாதம் 25 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டன. அதில் போக்குவரத்து படி (இடமாறுதல்) இடம் பெறாமல் இருந்தது. இந்தநிலையில் தற்போது போக்குவரத்து படியும் 25 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித்துறை சார்பு செயலாளர் சிவகுமார் நேற்று பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியை சோ்ந்த ஒருவா் மடிக்கணினி வாங்க இணையதள நிறுவனத்தில் ரூ.1.15 லட்சம் செலுத்தியுள்ளாா்.பணம் செலுத்திய 3 நாள்களுக்குப் பிறகு அவருக்கு தனியாா் கூரியா் மூலம் மடிக்கணினி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதனை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.மடிக்கணினி மிகவும் தரம் குறைந்ததாக இருந்தது.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா்,இணையவழி குற்றப்பிரிவில் புகாா் செய்தாா்.அதன்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் நரேந்திர மோடி அவர்கள் நாளை மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் தனது நல்வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
புதுவை முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றிய தன செல்வம் நேரு ஓய்வு பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பினை சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் மோகன் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை கல்வித்துறை துணை இயக்குனர் வெர்பினோ ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் நமச்சிவாயம் தோல்விக்கு புதுவை மாநில பாஜக தலைவர் செல்வகணபதியின் மோசமான நிர்வாகமே காரணம் என்றும் மேலும் சரியான நபருக்கு கட்சி மேலிடம், மாநில தலைவர் பதவியை வழங்கவில்லை. இதுவும் தோல்விக்கு காரணம் என்று புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் இன்று பேட்டியில் கூறியுள்ளார்.
புதுவை மாஜி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் சந்திப்பில் கூறியதாவது, பணம், அதிகாரம் போன்றவை பற்றி கவலைப்படாமல் புதுவை மக்கள் காங் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். புதுவையில் 28 இடங்களில் காங் வேட்பாளர் வைத்திலிங்கம் அதிக வாக்குகள் பெற்றுள்ளார். முதல்வர் ரங்கசாமியின் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுள்ளோம் கூட்டணி கட்சிகளுடைய ஒருங்கிணைப்பே இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.