India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோகுல் காந்தி தண்ணீர் பிரச்சனை குறித்து தெரியப்படுத்தினார். தேர்தல் முடிந்தவுடன் அப்பகுதியில் புது தண்ணீர் இணைப்பு அமைத்து அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையை கென்னடி எம்எல்ஏ தீர்த்துக் கொடுத்தார். மேலும் அதனை நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு நாளை 16 ஆம் தேதி காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரையிலும் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் இரு வேளையும் நடக்க உள்ளது. புதுச்சேரியில் 7 மையங்களில் நடக்க உள்ளது. இதில், 2578 பேர் தேர்வு எழுத உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏம்பலம் தொகுதியில் இன்று நடைபெற்ற தொண்டு நிறுவனத்தின் முதியோர் விழாவில் சபாநாயகர் பேசியதாவது, முதியோரை அவர்களின் பிள்ளைகள் கைவிட்டாலும் இந்த அரசு கைவிடாது என்பதற்காக அவர்களுக்கு ஓய்வூதியம் மூலம் கை கொடுத்து வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல்வர் ரங்கசாமி முதல் கையெழுத்து போட்டார். ஆனால் அனைவரும் சேர்ந்து முதலமைச்சரை ஏமாற்றி விட்டனர் என அவர் கூறினார்.
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் வெளியிட்டுள்ள செய்தியில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் வழிகாட்டுதல் படி மாநில செயலாளர் பொறுப்பு வகிக்கும் ரத்தினவேல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் மேலும் கட்சி நிர்வாகிகள் யாரும் அவரிடம் கட்சி சம்பந்தமான தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றார்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் எம்ஏ, எம்எஸ்சி உள்ளிட்ட 16 முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன இந்தப் பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மே 31ஆம் தேதி முதல் ஆன்லைனில் வரவேற்கப்பட்டது. விண்ணப்பங்களை ஜூன் 14ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
விஷவாயு தாக்கி பாதிக்கப்பட்ட ரெட்டியார் பாளையம் பகுதியில் துணைநிலை ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீரமைப்பு பணி , பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பொதுமக்களிடம் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
புதுவை அதிமுக சார்பில், ரெட்டியார்பாளையம் பகுதியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்ததற்கு காரணமான ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசை கண்டித்து பொதுப்பணிதுறை தலைமை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிமுக மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டணம் ஜூன்.16ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. முதல் 100 யூனிட்டுக்கு ₹2.25 முதல் ₹2.70 வரையும், 101 முதல் 200 யூனிட்டுக்கு ரூ.3.25 முதல் ரூ.4 வரையும், 201 முதல் 300 வரை ரூ.6 ஆகவும், 301 யூனிட்டுகளுக்கு மேல் வீடுகளுக்கான மின் கட்டணம் ₹6.80லிருந்து ₹7.50 ஆகவும் உயர்த்தப்பட்டது. வர்த்தக பயன்பாட்டிற்கான யூனிட்டிற்கு ரூ.5.60ல் இருந்து ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதுவை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த தகுதியற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது தான் காரணம். எதிர்காலத்தில் புதுவை முழுவதும் பாதாள சாக்கடை விஷவாயு தாக்குதல் நிச்சயமாக நடைபெறும். சுத்திகரிப்பு நிலையங்களை நவீனப்படுத்தப்பட வேண்டும். இது சம்பந்தமான அதிகாரிகள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.
புதுச்சேரி உள்ளாட்சி துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு தனியார் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளில் உருவாகும் கட்டிட கழிவுகள் ஒழுங்கற்ற முறையில் பொது சாலைகளில் தேக்கி வைத்து உள்ளனர் இதனை உரிமையாளர்கள் அகற்ற வேண்டும் தவறும் பட்சத்தில் நகராட்சியே அக்கழிவுகளை அகற்றி அபராதம் விதிக்கப்படும் என்றார்
Sorry, no posts matched your criteria.