India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் ரூ.31 கோடி செலவில், புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதனால், பஸ் நிலையம் தற்காலிமாக ஏ.எப்.டி., மைதானத்திற்கு இடம் மாற்றபட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையத்தின் மைய பகுதியில், பயணிகள் நிற்க, நிழற்கூரை அமைத்துள்ளனர். அதில் பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. குடிநீர் உள்பட, அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தர பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
புதுவை ஆளுநா் மாளிகைக்கு முதல்வா் ரங்கசாமி நேற்று இரவு சென்று துணைநிலை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பு குறித்து முதல்வா் அலுவலகத் தரப்பில் கேட்டபோது, மாநிலத் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறுவதையொட்டி, துணைநிலை ஆளுநரை அழைக்கும் வகையில் முதல்வா் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. ஜூலையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது
புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூட முதல்வா்(பொறுப்பு) அன்னப்பூரணி வெளியிட்ட செய்திக் குறிப்பில், பாரதியாா் பல்கலைக் கூடத்தில் ஜூன் 22-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திறனறித் தோ்வு தொடங்குகிறது. ஆகவே, அன்று காலை 9 மணிக்கு பல்கலைக்கூட முதல்வா் அலுவலகத்தில் தோ்வா்கள் ஆஜராக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில ஹஜ்கமிட்டி மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள ஹஜ் பயணிகளுக்கு புதுச்சேரி அரசின் மானியத் தொகையை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில ஹஜ்கமிட்டி சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைத்த நிலையில், 78 ஹஜ் பயணிகளுக்கு தலா ரூ.16 ஆயிரம் வீதம் மொத்தம் 12.48 லட்சம் ரூபாயை விடுவிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகையினை விரைவில் முதல்வர் வழங்க உள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ரெஸ்டோ பார்கள் தொடர்பாக கூட்டணியல் உள்ள பாஜக அமைச்சர் சாய் சரவணன்குமார் ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் ஏன் முதல்வருடம் மனு தரவில்லை. முதல்வருக்கும், அமைச்சருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதா? இனியாவது முதல்வர் பள்ளி, மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள ரெஸ்டோபார்களை மூடுவாரா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
புதுச்சேரி துணை ஆளுநர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நடந்த கஞ்சன்ஜங்கா ரயில் விபத்தை கேள்விப்பட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுவை அமைச்சரின் மகளுகுக்கு சொந்தமான இடத்தில் இருந்து சந்தன கட்டை பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு வனத்துறை நடவடிக்கை எடுத்த நிலையில் புதுவை அரசிடம் இருந்து பதில் இல்லை. இந்த வழக்கில் உண்மை தன்மையை கொண்டுவர வேண்டும் இந்த வழக்கை சிபிஜக்கு மாற்றம் செய்ய அரசு பரிந்துரை செய்ய வேண்டும் வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், புதுச்சேரியில் நீண்ட நெடிய காலமாக மதுபான கடைகள் இருந்து கொண்டிருக்கிறது. எந்தெந்த இடங்களில் குடியிருப்புகளுக்கு இடைஞ்சல் தருகிறதோ , அந்த இடங்களில் மதுக்கடைகளை தடை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் மக்களுக்கு இடையூராக உள்ள மதுக்கடைகள் மற்றும் ரெஸ்டோ பார்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கு குறித்து கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
புதுவை லாஸ்பேட்டை சேர்ந்த தேவசேனாவுடன் ஒருவர் பேஸ்புக் மூலம் நண்பர் ஆகி தினமும் சாட் செய்து வந்துள்ளார் பிறகு ஒரு பரிசு பொருள் அனுப்பி உள்ளதாகவும் கூறியிருக்கிறார் தொடர்ந்து தெரியாத நபரிடம் இருந்து தேவசேனாவுக்கு அழைப்பு வந்துள்ளது அப்போது பரிசு பொருள் வந்த பார்சலில் தங்கம் இருப்பதாகவும் இதற்கு வரி தொகை செலுத்த வேண்டும்கூறியிருக்கிறார் இதை நம்பி அவரும் ரூபாய் 2.21லட்சத்தை அனுப்பி ஏமாந்துள்ளார்
Sorry, no posts matched your criteria.