India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததாக மகேஷ் என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடன் வந்த செல்வம் என்பவரும், கள்ளச்சாராயம் குடித்ததாக மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது.
புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மகளிர் ஆணைய தலைவி மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு புதுவையைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பிரச்சினைகளுக்கு உள்ளான பெண்களை பாதுகாப்பதிலும் முன்னேற்றுவதிலும் ஆர்வம் அனுபவம் திறமை மிக்க பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்றும் விண்ணப்பங்களை ஜூலை 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றார்.
புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ரீகெண்சி டைல்ஸ் ஊழியர் காவல் நிலைய விசாரணையின் பொழுது இறந்த வழக்கில் ஒய்வு பெற்ற ஆய்வாளர் பெரியசாமி, தற்போது போக்குவரத்து காவல் எஸ்.ஐ வீரபத்திரசாமி ஆகியோருக்கு மூன்று வருடம் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. மூன்று வருடம் தண்டனை என்பதால் பிணையம் பெற்று அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் இதனை தொடர்ந்து புதுவை காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமி நேற்று டிஜிபி ஸ்ரீனிவாசை அழைத்துப் பேசினார். அப்போது பிற மாநிலங்களுக்கு புதுவையில் இருந்து மதுபானங்கள் கடந்து செல்லப்படுவதை தடுக்க வேண்டும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த செந்தில்குமாா் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளராக உள்ள கண்ணன், முதலியாா்பேட்டை காவல் நிலையத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளாா் . இடமாறுதலுக்கான உத்தரவை காவல்துறை தலைமையிட காவல் கண்காணிப்பாளா் கோதண்டராமன் நேற்று பிறப்பித்தாா்.
புதுச்சேரி காவல்துறையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காவல்துறை அதிகாரிகளிடம் அதற்கான சாவியை காவலர்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில், ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஒதுக்கப்பட்ட அட்டவணை சாதியினர் துணைத் திட்ட நிதி SCSP/TSP ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டு பணிகளுக்காக 23-24 நிதியாண்டிற்கு மக்களின் வளர்ச்சிக்கு 100 விழுக்காடு செலவு செய்யப்பட்டதா? 100 விழுக்காடு செலவு செய்து இருந்தால் அது தொடர்பாக புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா என்று தெரிவித்திருந்தனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் நேற்று ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் பொழுது சாராயக்கடைகளுக்கான ஏலம் நிறுத்தி வைக்கப்படவில்லை. அதை நிறுத்துவதற்கான முயற்சியும் இல்லை, அதுபோன்ற ஒரு யோசனையும் இல்லை. அதை எப்படி முறைப்படுத்துவது மக்களின் வாழ்விற்கு எதிராக இல்லாமல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று (ஜூன் 20) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; நம்முடைய ஞானிகளாலும் ரிஷிகளாலும் யோகா கலை உலகிற்கு தரப்பட்டது. அந்த யோகா கலையை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடுகின்ற விதமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி உலக யோகா தினத்தை முன்னிறுத்தினார். மனிதனுக்கு உடல் நலம் முக்கியம். அந்த உடல்நலத்தை பேணிக் காக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 2 கோப்புகளுடன் நேற்று கவர்னர் ராதாகிருஷ்ணனை அவரது மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பு அதிகபட்சமாக 15 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி சாராயக்கடைகளுக்கு அனுமதி பெறுவதற்காக தான், கவர்னரை சந்தித்தார் என்று கூறப்படுகிறது.
மேலும் முதல்வர் ரங்கசாமி அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கி, கவர்னரிடம் கடிதம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.