Pondicherry

News June 30, 2024

புதுச்சேரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அன்னபூர்ணா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இசை, நாட்டியம் மற்றும் நுண்கலைத் துறைகளுக்கான முதுநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கு, ஜூலை 1ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் பாரதியார் பல்கலைக் கழகத்துக்கு தபால் மூலமாகவோ நேரிலோ வந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

News June 30, 2024

புதுச்சேரி முதல்வருக்கு கேள்வி

image

புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மீண்டும் நியாயவிலைக் கடைகள் திறக்கப்படும் போது பல பிரச்னைகள் எழும். அப்படி திறந்தாலும் தமிழகத்தைப் போல பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை வழங்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. எனவே நியாயவிலைக் கடைகள் திறப்பு குறித்து முதல்வர் ரங்கசாமி மக்களுக்கு தெளிவுபடுத்தி விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

News June 29, 2024

புதுவையில் கள்ளுக் கடைகளுக்கு ஏலம்

image

புதுவையில் நடப்பாண்டுக்கான மதுக்கடை, கள்ளுக்கடைகளுக்கான ஏலம் இன்று நடை பெறுகிறது. கடந்தாண்டு ஏலம் ஜூலை 1 ஆம் தேதி  உடன் முடிவடையும் நிலையில் புதிய கடைகளுக்கு ஏலம் நடைபெறுகிறது. புதுச்சேரியில் 85 மதுக்கடை, 66 கள்ளுக்கடைகள், காரைக்காலில் 23 மதுக்கடை, 26 கள்ளுக்கடைகளுக்கு ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில் மதுக்கடை ஏலம் மூலம் புதுச்சேரி அரசுக்கு அதிகபட்சமாக ரூ.120 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

News June 29, 2024

மோடி மௌனம் காப்பது ஏன்? நாராயணசாமி கேள்வி

image

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போது, அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மோடி மௌனம் காப்பது ஏன் என்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மிகுந்து இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சியாக ரங்கசாமி ஆட்சி உள்ளது என்றும் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

News June 29, 2024

புதுவை: அதிமுக மாநில செயலாளர் வேண்டுகோள்

image

புதுவை நடந்து முடிந்த மக்களவை தேர்தல் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதற்கு புதுவை காவல் துறையினரின் செயல்பாடு மிக முக்கியமானதாகும். இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தேர்தல் பணியாற்றிய காவலர்களுக்கு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டுமென அதிமுக மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News June 29, 2024

தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் உதவித்தொகை

image

புதுவை சுகாதாரத்துறை சார்பு செயலர் முருகேசன் நேற்று அனைத்து மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய உத்தரவில்,புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மற்றும் உறைவிட பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை போல் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் உதவித்தொகை வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.

News June 29, 2024

நாளை 12 மையங்களில் எழுத்துத் தேர்வு

image

புதுச்சேரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ் குமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஊர்க்காவல் படை ஆண், பெண் வீரர்கள் தேர்வுக்கான எழுத்து தேர்வு, நாளை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்த 3,034 ஆண்களும் 1,195 பெண்களும் எழுத்துத் தேர்வில் பங்கேற்கவுள்ளனர் என்று கூறியுள்ளார்.

News June 28, 2024

தமிழர் அடையாளத்துடன் பிரதமர் ஆட்சி – எம்.பி.,புகழாரம்

image

பாஜக மாநிலங்களவை எம்.பி. செல்வகணபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதம் இந்துக்களின் கலாச்சாரம், பண்பாடுகளால் நிரம்பிய தேசம். அதன் ஒரு துளி தான் செங்கோல். இந்துக்களான தமிழர் பெருமையும் அது தான். அந்த விழுமியங்களை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பின் தொடர்ந்தனர். அந்த பாரம்பரியத்தை பிரதமர் மோடி தொடர்கிறார். தமிழர் அடையாளத்துடன் ஆட்சியை அறத்துடன் நடத்துகிறார் என்றார்.

News June 28, 2024

கள்ளச்சாராயம் விவகாரம்: ஜிப்மரில் இருவர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், ஏற்கனவே 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஜிப்மரில் சிகிச்சை பெற்ற வந்தவர்களில் ஏசுதாஸ்(35), ராமநாதன்(62) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது.

News June 27, 2024

பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

image

காரைக்கால் கூடுதல் வேளாண்மை இயக்குநர் அலுவலகம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “காரைக்காலில் தற்போது சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தங்களது குறுவை பயிரை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 30.06.2024-வரை சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரை 15.07.2024-க்குள் காப்பீடு செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!