India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கான எழுத்துத் தேர்வில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளது எனவும், அந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்வை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்டாக் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி மாற்றப்பட்டு, புதுச்சேரி கஸ்தூரிபா மகளிர் கல்லூரி முதல்வர் ஷெரி ஆன் ஜெராா்தினே சிவன் சென்டாக் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை துணை நிலை ஆளுநர் சார்பில், அரசு உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பு செயலர் சௌமியா வெளியிட்டார்.
புதுச்சேரியில் முதல்வருக்கு எதிராக பாஜக மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் நேற்று மாநில பாஜக தலைவரை அழைத்து, முதல்வர் ரங்கசாமி தனது அறையில் விவாதித்தார். இதுபற்றி கட்சி மேலிடத்துக்கு மாநிலத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். அதேநேரத்தில் நேற்று இரவு டெல்லிக்கு பாஜக, ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் புறப்பட்டனர்.
புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் அதன் துவக்க விழா புதுச்சேரி கதிர்காமம் மருத்துவ கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு சட்டங்கள் குறித்து கையேடு புத்தகத்தை வெளியிட்டனர்.
மத்திய அரசு இன்று முதல் நடைமுறைப்படுத்த உள்ள மூன்று புதிய சட்டங்களின் அறிமுக விழா புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, மூன்று சட்டங்களை அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரையாற்றினாா். அப்போது அவர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்களால் மக்கள் அச்சமின்றி வாழ்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
தேசிய மருத்துவர் தினத்தையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மனித குலத்தின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக சேவையாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும், எனது இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மக்களவை தோ்தலில் 26 போ் போட்டியிட்டனா். தோ்தலில் அவா்கள் செலவழித்த தொகையை, இப்போது சமா்ப்பிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி
போட்டியிட்ட அனைத்து வேட்பாளா்களும் செலவினக் கணக்குகளை, ஆட்சியர் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான குலோத்துங்கன், மத்திய தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் முகமது மன்சூருல் ஹசன், லட்சுமிகாந்தா ஆகியோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
சென்னை வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) மற்றும் நாளை (ஜூலை 1) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற அணியாக வரலாற்று சாதனை படைத்திருக்கும். மேலும் இந்திய அணிக்கு எனது பாராட்டுகளையும் ,வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி சபாநாயகர் செல்வம் புதுவை சட்ட சபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 3 வாரத்தில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் ரேஷன் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு அரிசி விநியோகிக்கப்படும் என்றும், புதிய சட்ட மன்ற கட்டிடத்திற்கு ஆளுநர் விரைவில் அனுமதி அளிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.