India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் நேரத்தை மாற்றியமைத்து கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து அரசு பள்ளிகளும் காலை 9 மணிக்கு தொடங்கும் எனக் கூறியுள்ள கல்வித்துறை, மாலை 4.20 வரை வகுப்புகள் நடக்கும் எனக் கூறியுள்ளது. 12.25 முதல் 1.30 மணி வரை மதிய உணவு இடைவேளை எனவும், காலை 9.00 முதல் 9.15 க்கு வழிப்பாடு நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு புதுச்சேரி அரசு கோரி உள்ள நிதியை ஒதுக்கி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், புதிய சட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், அடிப்படை பிரிவுகளில் உள்ள தவறுகளை திருத்தவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியின் எல்லைகள் புதுவை மாநிலம் மண்ணாடிபட்டு, கொம்யூன் பஞ்சாயத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளுக்கு நாளை வரை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை காவல்துறை, காவல் துறையினரின் தொழில்முறைத் தரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, இந்நிலையில் புதுவை பல்கலைக்கழகத்துடன் இன்று புதுவையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புதுவை காவல்துறை சார்பில் காவல்துறை இயக்குநர் டாக்டர் பி. ஸ்ரீனிவாஸ் ஐபிஎஸ் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் ரஜ்னீஷ் பூட்டானி ஆகியோர் கையொப்பமிட்டார்.
புதுச்சேரி மாநில அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று புதுச்சேரி நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கவும், அந்த சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்ட வலியுறுத்தியும் கோசங்கள் எழுப்பினர். இதில், அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
புதுவை மற்றும் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநில சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகம் நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, பல் மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தரவரிசைப் பட்டியலானது புதுவை மாநில சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள சாராயம் கள்ளுக்கடைகளின் ஏலம் இணையதளத்தில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. ஆனால் கிஸ்தி தொகை உயர்வு காரணமாக, சாராயக்கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை. அதன் பிறகு 5 சதவீதம் கிஸ்தி தொகை குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது. கிஸ்தி தொகை குறைப்புக்கு பின் சாராயக்கடையின் ஏலம் சூடுபிடித்துள்ளது. இன்று வரை 38 சாராயக்கடைகளும் , 35 கள்ளுக்கடைகளும் ஏலம் எடுக்கப்பட்டன.
புதுவை பி.எஸ்.என்.எல் சிறப்பு மேளா விற்பனை முகாம் நாளை (ஜுலை 8ம் தேதி முதல் IIம் தேதி வரை) 4 நாட்கள் மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை, கரியமாணிக்கம், தவளக்குப்பம், திருக்கனூர், மதகடிபட்டு , பாகூர், வில்லியனூர், ரங்கபிள்ளை வீதி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமில் புதிய சிம்கார்டு வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக
பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.