Pondicherry

News July 14, 2024

புதுச்சேரி பாஜக கட்சி பிரச்னை சரி செய்யப்படும் – மத்திய அமைச்சர்

image

புதுச்சேரி பாஜகவின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று மரப்பாலம் சுகன்யா சென்டரில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசும்போது அனைவரும் ஒன்றாக இருந்து செயல்படவேண்டும்.பாஜக கட்சிக்குள் பிரச்னைகள் இருப்பது தெரியும். பாஜக தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோர் வழிகாட்டுதல் வழிகாட்டுதலின்படி சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

News July 14, 2024

காரைக்காலில் நர்சிங் நுழைவுத் தேர்வு

image

காரைக்காலில் உள்ள நிர்மலாணி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் காரைக்கால் அம்மையார் அரசு மேல்நிலை பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் புதுவை அரசு சார்பில் சென்டாக் மூலமாக பி.எஸ்.சி நர்சிங் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றன. இதில் காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம் 240 பேர் விண்ணப்பித்த நிலையில் 13 பேர் தேர்வு எழுத வராத நிலையிலும் 227 பேர் இன்று தேர்வு எழுதினார்கள்.

News July 14, 2024

மத்திய அமைச்சருடன் புதுச்சேரி சபாநாயகர் சந்திப்பு

image

புதுச்சேரி மாநிலத்திற்கு இன்று வருகை தந்துள்ள மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை, சட்டப்பேரவை தலைவர் செல்வம் மலர்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் மரப்பாலத்தில் உள்ள தனியார் உணவகத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் கலந்து கொள்ள உள்ளார்.

News July 14, 2024

புதுவை யாசகர்களுக்கு மறுவாழ்வு திட்டம்

image

புதுவை யாசகர்களுக்கு ஷரோன் சொசைட்டி மூலம் “புன்னகை” என்ற மறுவாழ்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனையடுத்து தாகூர் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு இத்திட்டம் தொடர்பான பயிற்சி, கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதற்கு சமூக நலத்துறை இயக்குனர் ராகினி தலைமை வகித்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்.

News July 14, 2024

கேபிள் டிவி இணைப்புக்கு ரூ.8 கேளிக்கை வரி

image

புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுவை நகராட்சி பகுதியில் செயல்படும் கேபிள் டிவி நடத்துபவர்கள் ஒரு இணைப்புக்கு மாதாந்திர சந்தா தொகையாக 10 சதவீதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும். மேலும் குழு அமைக்கப்பட்டு கேபிள் டிவி இணைப்பு ஒன்றுக்கு மாதந்தோறும் ரூ.8 நகராட்சிகளுக்கு செலுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

News July 14, 2024

சுகாதாரத் துறைக்கு இரண்டு சார்பு செயலர்கள் நியமனம்

image

புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுகாதாரத் துறை செயலகத்தில் மேலும் ஒரு சார்பு செயலரை நியமிப்பது அவசியம் என்று கருதப்பட்டது. இதையடுத்து இனி சுகாதாரத்துறை முதலாவது சார்பு செயலராக முருகேசனும், இரண்டாவது சார்பு செயலாளராக சௌமியாவும் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

நீதிமன்றத்தால் மட்டுமே முடியும்: புதுவை துணை நிலை ஆளுநர் 

image

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று 7 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய துணை நிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன், அரசு அதிகாரத்தில் இருப்பவர்களுடைய நியாயத்திற்கு புறம்பான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், ஒரு இடத்தில் தான் அது நீதிமன்றங்கள் மட்டும் தான் என்றார்.

News July 14, 2024

புதுச்சேரி முதல்வர் அறிவுறுத்தல்

image

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று 7 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ரங்கசாமி அனைவருக்கும் விரைவாக நீதி கிடைக்க வேண்டும், வழக்கு தேக்க நிலை மாற வேண்டும் என்பதை மக்கள் அனைவரும் எதிர் பார்க்கின்றனர் என்று அறிவுறுத்தியுள்ளார்.

News July 14, 2024

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

image

அரியாங்குப்பம் மற்றும் ஊசுடு தொகுதி பெண்கள் சுயதொழில் செய்வதற்காக ஃபியூச்சர் இந்தியா அறக்கட்டளை சார்பில் நான்கு சக்கர தள்ளுவண்டி, சுய உதவி குழுக்களுக்கு நன்கொடை, புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சாய் சரவணன்குமார் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News July 14, 2024

புதுவையில் பிரான்ஸ் நாட்டின் சுதந்திர தின விழா

image

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு குடி உரிமை பெற்றவர்கள் பிரான்ஸ் நாட்டின் சுதந்திர தினத்தை (ஜூலை 14) கொண்டாடும் வகையில் நேற்று(ஜூலை 13) புதுச்சேரி பிரான்ஸ் தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கொண்டாட்டத்தில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் விளக்கை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!