India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உட்கோட்ட நடுவர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருமணம், தொடக்க விழாக்கள், கோவில் திருவிழாக்கள் போன்ற காரணங்களுக்காக பொது இடங்களில் சட்ட விரோத பதாகைகள் வைப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் 9443383418 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த 199 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்ச ரூபாய் வீதம், மொத்தம் ரூ.1.99 கோடி திருமண நிதி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ரங்கசாமி தனது சட்டப்பேரவை அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இந்தத் தொகையானது அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மேலும் இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன் குமார், துறை இயக்குநர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
புதுச்சேரி துறையின் மாவட்டப் பதிவாளர் தயாளன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், பதிவுத் துறை சார்ந்த செயல் முறைகளை கணினி மயமாக்குவதிலும், இணைய வழியாக பொது மக்களுக்கு சேவைகள் வழங்குவதிலும், புதுச்சேரி பதிவுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, வரும் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி நள்ளிரவு வரை தடைப்படும் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
புதுச்சேரி நயினார் மண்டபம் நாக முத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அன்று மதியம் 2 மணி முதல் புதுச்சேரி கடலூர் சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரி காரைக்கால்மேடு அரசுப்பள்ளியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி லித்யாஸ்ரீ இன்று ஒருநாள் மட்டும் ‘முதல்வன்’ பட பாணியில் காரைக்கால் மாவட்டத்திற்கு ஆட்சியராக பணியாற்றுவர் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மாணவி மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பணிகளில் ஈடுபடுவார். இது மாணவர்களை ஊக்குவிக்கும் என்று சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15 நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. புறவழிச் சாலையில் அமைந்துள்ள காரைக்கால் ஸ்டேடியத்தில் நடைபெற முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் அண்மை காலங்களில் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன ரூ.4 லட்சம் மதிப்பிலான 22 விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை காரைக்கால் சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். பின்னர் உரிமையாளரிடம் இன்று காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் தலைமையில் காரைக்கால் சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது இணைய வழி மூலமாக ஷேர் மார்க்கெட்டிங் டிரேடிங் உள்ளிட்டவை மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதாக கூறினார். இதற்கு பொதுமக்களின் பேராசையை காரணம். முதலீடு செய்ய விரும்புபவர்கள் செபியை தொடர்பு கொண்டு முதலீடு செய்யலாம் அல்லது தங்களது சந்தேகங்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்
புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா இன்று (ஜூலை 17) வெளியிட்டுள்ள உத்தரவில், புதுச்சேரியில் நீட் அல்லாத படிப்புகளுக்கு இறுதி தரவரிசை பட்டியலுடன் முதல் சுற்று இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இடம் கிடைத்த மாணவர்கள் 16ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த காலக்கெடு நாளை 18ஆம் தேதி மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட காவல்துறையின் புதிய சட்ட திட்டங்கள் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து ஒராண்டு இதழை இன்று (ஜூலை 17)முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் வெளியிட்டார். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த ஓராண்டு இதழில் காரைக்கால் மாவட்ட போலீசார் செயல்படுத்திய புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய வழக்குகள் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.