Pondicherry

News July 23, 2024

ரூ.12,700 கோடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல்

image

புதுச்சேரியில் கடந்த மாதம் திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ரூ.12,700 கோடி-க்கு திட்டமிடப்பட்டு மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. ஒரு மாதமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில், தற்போது மத்திய அரசு பட்ஜெட் நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News July 23, 2024

பட்ஜெட்-ஐ நேரலையில் பார்த்த முதலமைச்சர்

image

2024 -25 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரையில் உள்ள அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரிய எல். இ. டி. திரையில் நேரடி ஒளிபரப்பை கண்டு பார்த்து ரசித்தார்.

News July 23, 2024

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

image

புதுச்சேரி மாநில கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் கலைப்பண்பாட்டு துறை மற்றும் ஆரோவில் அறக்கட்டளை ஆகியவற்றின் இடையே புரிந்து ஒப்பந்தம் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் அரசு செயலர் நெடுஞ்செழியன் ஆரோவில் அறக்கட்டளையின் சார்பில் சிறப்பு அதிகாரி வஞ்சுளவள்ளி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

News July 23, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

image

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறையும் இணைந்து நாசா முக்க பாரத் அபியான் என்று திட்டத்தின் சிறப்பு கூட்டம் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் முனைவர் மணிகண்டன் தலைமையில் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றன. இதில் கடந்த வருடங்களில் போதை பொருள்களுக்கு உண்டான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் திட்டங்கள் குறித்து பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

News July 23, 2024

பேனர் வைப்பவர்களுக்கு சப் கலெக்டர் எச்சரிக்கை

image

புதுவையில் சட்ட விரோதமான பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டு வருகிறது. சட்ட விரோத பேனர்கள் குறித்து போட்டோ எடுத்து 94433 83418 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் அனுப்பலாம் எனவும் போட்டோ எடுக்கப் பட்ட தேதி, நேரம், சம்பந்தப்பட்ட இடம் குறித்த விபரங்கள் போட்டோவில் இடம் பெற வேண்டும். மேலும் பேனர் வைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் அறிவித்து உள்ளார்.

News July 23, 2024

ஜிப்மர் மருத்துவமனையில் காலி பணியிடங்கள்

image

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு குரூப் பி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நர்சிங் அதிகாரிகளுக்கான 154 பணியிடங்கள் உட்பட பல பணியிடங்கள், முதுகலை பட்டதாரிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த காலி பணியிடங்களுக்கு http://www.jipmer.edu.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 22, 2024

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி டெல்லி பயணம்

image

டெல்லியில் வரும் 27 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி மற்றும் மாநில அந்தஸ்து குறித்து பேச உள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடியை தனியாக சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

News July 22, 2024

நலத்துறை செயலரிடம் அங்காளன் எம்எல்ஏ மனு

image

புதுச்சேரி திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் இன்று தலைமைச் செயலகத்தில் நலத்துறை செயலரிடம் அளித்த மனுவில், மத்திய குடிமை பணி தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ரூ.30,000 உதவித்தொகை மத்திய குடிமைப் பணி அலுவலகம் சென்று வரும் செலவுகளை வழங்க வேண்டும். இதன் மூலம் பல மத்திய அரசு அதிகாரிகள் உருவாகும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.

News July 22, 2024

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை

image

புதுவை ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 107 பயனாளிகளுக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.2.20 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.2,35,40,000 உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் தனது அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

News July 22, 2024

புதுச்சேரியில் எப்போது பட்ஜெட் என நாராயணசாமி கேள்வி

image

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி அளிக்காமல் தொடர்ந்து புதுச்சேரி அரசை பிரதமர் மோடி அரசு புறக்கணிப்பதாக நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்ய காலதாமதம் ஆனதற்கு காரணம் என்ன? இதுவரை மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை எனவும் காங்கிரஸ் ஆட்சியில் என்ன நிலை நீடித்ததோ அதே நிலை தான் தற்போதும் நீடித்து வருகிறது என்றார்.

error: Content is protected !!