India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் சலீம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. ஏழைகள் அதிகரித்துள்ள நிலையில் மாணவா்களின் கல்விக் கடனைத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பு நிதி நிலை அறிக்கையில் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது. மேலும் மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றார்.
புதுச்சேரி பாஜக தலைவர் செல்வகணபதி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு மத்திய நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்வதையும், மக்கள் மத்திய அரசின் கொள்கை மீது வைத்துள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக நிதி நிலை அறிக்கை உள்ளது என்றார்.
புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோரை விமர்சித்துப் பேசி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர், வாரியத் தலைவர் பதவியை மற்றவர்களுக்கு சுழற்சி முறையில் அளிக்க வலியுறுத்தி நேற்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் புதுதில்லி சென்றனர். அங்கு மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலை சந்தித்து பேசினர்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த 121 படிப்புகளில் சேர ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான நுழைவுத் தோ்வு சென்னை, பெங்களூரு உள்பட 9 நகரங்களில் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தோ்வு முடிவுகளை பாடப் பிரிவு வாரியாக ஜிப்மா் நிர்வாகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி சமூக நலம், மகளிா் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் தேனி ஜெயக்குமாா் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மற்றும் அரசின் எந்த மாத உதவித் தொகையும் பெறாத 21-55 வயதுக்குட்பட்ட குடும்ப தலைவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த மகளிா் உதவித் தொகையைப் பெற விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறவும் எனத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் இன்று அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தலைவி ராஜலஷ்மி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாத இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள போனஸ் மற்றும் பஞ்சப்படி போன்றவற்றை காலத்தோடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி சட்டப்பேரவையை முற்றுகையிட போவதாக தெரிவித்ததார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதாகவும், நாட்டின் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்து செல்வதற்கான பட்ஜெட் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு ரோப்ஸ்கிப்பிங் விளையாட்டு சங்கம் நடத்திய 2-வது மாநில ரோப்ஸ்கிப்பிங் பயிற்சி முகாம் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தனியார் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதுச்சேரி ரோப்ஸ்கிப்பிங் விளையாட்டு சங்கத்தின் தலைவர் கிறிஸ்டிராஜ் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
காரைக்காலில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜவாஹர் நவோதய வித்யாலயா முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான 6-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக நவோதய வித்யாலயா தெரிவு நிலைத் தேர்வு நடத்தவுள்ளது. இதில் காரைக்கால் அரசு பள்ளிகளில் 5-ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 16.09.2024 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் உரையில் விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது தவறானது ஆகும். மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்தார் அவர்.
Sorry, no posts matched your criteria.