Pondicherry

News July 25, 2024

அரசு சார்பில் “சுயமரியாதைச்சுடர்” பிறந்தநாள் விழா

image

சுயமரியாதைச்சுடர் எம்.ஏ. சண்முகம் அவர்களின் பிறந்தநாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மரப்பாலம்-புவன்கரே வீதி சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டப்பேரவைத் துணைத்தலைவர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News July 25, 2024

கார்கில் வெற்றி தினம்: புதுவை முதல்வர் புகழாரம்

image

புதுவை முதல்வர் ரங்சாமி வெளியிட்ட செய்தி குறிப்பில்: கார்கில் வெற்றி வீரர்களின் தைரியம், வீரம் மற்றும் தியாகத்தை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். தேசத்தைக் காக்கத் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாக மறவர்களுக்கு எனது வீர வணக்கங்கள் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி கார்கில் வெற்றி தினம் முன்னிட்டு புகழாரம் சுட்டினார்.

News July 25, 2024

கோரிக்கைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை: முதல்வர்

image

புதுவையில் ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கொடை மற்றும் 6-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி இன்று சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அவர்களை சட்டப்பேரவைக்கு அழைத்துச் சென்று, முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்த கோப்பை பரிசீலித்து கோரிக்கைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

News July 25, 2024

சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம்

image

புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் இன்று மாலை சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாத இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள போனஸ் மற்றும் பஞ்சப்படி போன்றவற்றை காலத்தோடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

News July 25, 2024

புதுச்சேரியில் ஆகஸ்டில் பட்ஜெட் தாக்கல்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், துணைநிலை ஆளுநர் உரையுடன் வரும் 31-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் கூட உள்ளது. மேலும், ஆகஸ்ட் 2-ம் தேதி நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ.12,700 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்

News July 25, 2024

அம்பேத்கார் சிலைக்கு நிழற்குடை அமைக்கும் பணி

image

புதுச்சேரி அரசின், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதி பெரியபேட்டில் அமைந்துள்ள சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு ரூ.24 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் படிக்கட்டுகளுடன் கூடிய ஸ்டெயின்லஸ் ஸ்டீல் குடை அமைப்பதற்கான பூமி பூஜை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவா கலந்து கொண்டு இன்று தொடங்கி வைத்தார்.

News July 25, 2024

புதுச்சேரிக்கு புதிய டிஜிபி நியமனம்

image

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது டிஜிபியாக உள்ள ஸ்ரீனிவாஸின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனை அடுத்து இன்று புதிய டிஜிபியாக ஷாலினி சிங்கை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த புதிய டிஜிபி ஷாலினி சிங் 1996 பேட்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. இவர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 25, 2024

ராமதாஸ் பிறந்தநாள் – தங்க தேர் இழுத்து வழிபாடு

image

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 86-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரி பாமக சார்பில் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பாமக மாநில துணை அமைப்பாளர் வடிவேல் தலைமையில் மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தங்க தேர் இழுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News July 25, 2024

புதுச்சேரி பட்ஜெட் 2024

image

புதுச்சேரி மாநில 15-ஆவது சட்டசபையின் 5-ஆவது கூட்டம் வருகிற 31-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சட்டசபையில் ஆளுநர் உரையாற்றுகிறார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பின்னர், ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.

News July 25, 2024

பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பணிக்கு வேலை வாய்ப்பு முகாம்

image

தேசிய வாழ்வாதார சேவை மையம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் புதுவை சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையன்ஸ பிரான்சிசில் ஜூலை.27 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது. இதில் அனைத்து சமூகத்தை சேர்ந்த பிரெஞ்சு மொழி பி-1 இளநிலை, முதுநிலை முடித்தவர்கள் (18-35 வயது) பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க வருபவர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் அசல் கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

error: Content is protected !!