Pondicherry

News July 29, 2024

ஏனாமில் கிராமங்களில் புகுந்த வெள்ளம்

image

ஆந்திரா உள்ளிட்ட சில இடங்களில் பெய்து வரும் மழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் அருகில் உள்ள பத்ராச்சலம், தவிலேஸ்வரம் அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டது. இதனால் ஏனாம் கோதாவரி கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. மீட்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

News July 29, 2024

புதுச்சேரி கவர்னர் – முதல்வர் திடீர் சந்திப்பு

image

நாடு முழுதும் 12 மாநில கவர்னர்கள் மாற்றப்பட்டனர். அதில், கவர்னர் ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நேற்று கவர்னர் மாளிகை வந்த முதல்வர் ரங்கசாமி, கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். அதன்பின்பு கவர்னர் ராதாகிருஷ்ணன் ஹைதராபாத் புறப்பட்டு சென்றார். பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறும்போது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்தார்.

News July 29, 2024

மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

image

புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் புதுச்சேரியில் இளநிலை மருத்துவம் பயில சென்டாக்கின் www.centacpuducherry.in என்ற இணைய முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி என சென்டாக் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. SHARE IT WITH YOUR FRIENDS NOW!

News July 29, 2024

புதுச்சேரியில் புதிய கவர்னர் பதவி ஏற்பு எப்போது?

image

புதுவையின் பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதுவை புதிய துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் ஓரிரு நாளில் பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது. புதுவை சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டம் வரும் 31-ஆம் தேதி கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத் தொடரில் துணைநிலை ஆளுநர் உரையாற்ற உள்ளார்.

News July 28, 2024

பரதநாட்டிய மாணவிகளை வாழ்த்திய அமைச்சர்

image

புதுச்சேரி ஸ்ரீ உதயம் நாட்டியாலையா பள்ளியை சேர்ந்த ஏழு பரதநாட்டிய மாணவிகள் இன்று கம்பன் கலையரங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்தினார். இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு மாணவிகளை தனி தனியாக பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார். தொடந்து மாணவிகளுக்கு அமைச்சர் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

News July 28, 2024

புதுச்சேரியில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் பேட்டி

image

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்படவில்லை எனவும் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு புதுச்சேரிக்கு பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 280 கோடி ஒதுக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

News July 28, 2024

மத்திய அமைச்சர் மற்றும் புதுவை அமைச்சர் ஆலோசனை

image

புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்ய வருகை தந்துள்ள மத்திய இரயில்வே மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் சோமன்னா அவர்களை இன்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்றார், தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திற்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்து இணை அமைச்சர் உடன் ஆலோசனை நடத்தினார்.

News July 28, 2024

பாஜக சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது

image

புதுவையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்ற பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானைவிடம் முதல்வர் ரங்கசாமி காட்டமாக பேசியுள்ளார். மேலும் பாஜக கூட்டணியில் தங்களுக்கு இழப்புதான் ஏற்பட்டுள்ளது எனவும் பாஜக எம்.எல்.ஏ-க்கள் தொடர்பாக தன்னிடம் வராதீர்கள் என கூறியுள்ளார். மேலும் ஆளுங்கட்சி பக்கம் வர விருப்பம் இருந்தால் வரட்டும், இல்லையெனில் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

புதிய ஆளுநரை பற்றிய தகவல்

image

புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கே.கைலாசநாதன் 1979-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பேட்ச்சை சேர்ந்தவர் ஆவார். இவர் குஜராத்தின் முதன்மை செயலர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். குறிப்பாக பிரதமர் மோடிக்கு அரசியல் & நிர்வாக ரீதியில் மிகவும் நெருங்கிய நபராக கைலாசநாதன் கருதப்படுகிறார். 2013-ஆம் ஆண்டுடன் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டிய இவர் 2024 வரை பணியில் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

News July 28, 2024

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சோமன்னா ஆய்வு

image

புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சோமன்னா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களை ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!