India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடமேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்வோர் எச்சரிக்கையோடு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் கட்சி நிர்வாகிகள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோயிலில் பாஜக தொண்டர் ஏற்பாட்டில் நமச்சிவாயம் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு அவருக்கு ராட்சத அளவில் சாக்லேட், பொக்கே கொடுக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தொடர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 150க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைகள் 11 ஆம் தேதி கடலில் கரைக்கப்படுகின்றன. பாதுகாப்பு தொடர்பாக எஸ்பி நாராசைதன்யா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஊர்வலத்தில் ஒவ்வொரு சிலைக்கும் விழா குழு அளிக்கும் பாஸ் வைத்துள்ள 4 பேர் மட்டுமே வர வேண்டும் என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடந்த காலங்களில் சினிமா நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் என்னவானது என எல்லோருக்கும் தெரியும் இருப்பினும் நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி செல்வார் என்பது அவருக்குத்தான் தெரியும் என்றார்.
புதுவை லெனின் வீதியில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சி.சி.டி.வி. கேமிரா அமைத்தல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 14ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மேலும் விபரங்களுக்கு 90434 89659, 0413 2246600 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன விபத்துகளில் இழப்பீடு வழங்குவதை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, புதுச்சேரியில், இந்த வழக்குகளை கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட குழுவின் கன்வீனராக சட்டசேவை ஆணைய முதன்மை சார்பு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை, சட்டத்துறை செயலாளர் சத்தியமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய கடலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரேகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி நேற்று உத்தரவிட்டார். மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் பச்சையப்பன் ஆஜரானார்.
புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய கடலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரேகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி நேற்று உத்தரவிட்டார். மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் பச்சையப்பன் ஆஜரானார்.
புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியில் உள்ள கோலக்கார அரங்கசாமி நாயகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழா முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் பாஜக தலைவர் செல்வகணபதி, ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார் .
Sorry, no posts matched your criteria.