Pondicherry

News February 25, 2026

புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

image

புதுச்சேரிக்கு வரும் மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஆளில்லா விமானங்கள் (UAV) மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை மீறுவோருக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

News February 25, 2026

புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

image

புதுச்சேரிக்கு வரும் மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஆளில்லா விமானங்கள் (UAV) மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை மீறுவோருக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

News February 24, 2026

தலைமை தேர்தல் ஆணையர் நாளை புதுச்சேரி வருகை

image

புதுச்சேரிக்கு நாளை தலைமை இந்திய தேர்தல் ஆணையர் வருகை தர உள்ளார். மேலும் அவருடன் தேர்தல் ஆணையர்கள் துணை தேர்தல் ஆணையர்கள் வர உள்ளனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் நாளை அவர்கள் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை நடத்த உள்ளனர். தொடர்ந்து அவர்கள் புதுச்சேரி தேர்தல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

News February 24, 2026

புதுச்சேரியில் அதிகாரிகள் இடமாற்றம்

image

புதுவை தலைமை செயலாளர் சரத்சவுகான் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏனாம் பிராந்தியத்தின் நிர்வாகியாக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அங்கித்குமார் மாற்றப்பட்டு மாகே பிராந்தியத்தின் புதிய நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டார். துறைமுகத்துறையின் இயக்குநராக பணியாற்றி வரும் புதுவை சிவில் சர்வீஸ் அதிகாரி சிவ்ராஜ் மீனா ஏனாம் பிராந்தியத்தின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

News February 24, 2026

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

image

புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த ஒரு மாதமாக ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளனர். முதலமைச்சரின் உறுதிமொழியை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

News February 24, 2026

ஜெயலலிதா பிறந்த நாள்: புதுச்சேரியில் மரியாதை

image

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள மேரி கட்டிட அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது உருவப்படத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் KSP ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

News February 24, 2026

புதுச்சேரி: 14 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்

image

புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை ஒட்டி, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் துறை உத்தரவிட்டது. அதன் பேரில், காவல்துறை அதிகாரிகள் அரசு துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதான் ஒரு பகுதியாக 14 குடிமைப் பணி அதிகாரிகளை அதிரடியாக இட மாற்றம் செய்து கவர்னர் கைலாஷ்நாதன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News February 24, 2026

புதுச்சேரி: டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

புதுச்சேரி மக்களே, புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு <<>>க்ளிக் செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW

News February 24, 2026

காரைக்கால்: மயில்களை விரட்டுவதற்காக புதிய கருவி

image

காரைக்காலில் உள்ள விளைநிலத்தில், இரை தேடி வரும் மயில்கள் பயிரை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதுத்துறை சேர்ந்த விவசாயி கணேசன் மயில்களை விரட்டுவதற்காக பிரத்யேக மயில் விரட்டி கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதில் காற்றில் சுழலக் கூடிய காற்றாடியில் மணிகளை கட்டி அதன் மூலம் எழுப்பும் ஒலியினால், மயில்கள் சேதப்படுத்துவதை தடுக்க முடியும் என விவசாயி தெரிவித்தார்.

News February 24, 2026

புதுச்சேரி: மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைப்பு

image

புதுச்சேரி மங்கலம் தொகுதியைச் சேர்ந்த ரங்கன், அவரது மகள் பிரியா, ஜே.கே. ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அரசு அதிகாரி யஸ்வந்தய்யா உள்ளிட்டோர், தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சென்னை முதல்வர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா உடனிருந்தார்.

error: Content is protected !!