India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கூட்டணி சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் திமுக மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் இன்று திமுகவினர் அண்ணா சாலை மறைமலை அடிகள் சாலை, நேரு வீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி ஆதரவு கோரினர்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
புதுச்சேரியில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நாளை செப்டம்பர் 18, 2024 (புதன்கிழமை) அன்று பந்த் மற்றும் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் புதுவையில் காங் ஆட்சியில் மின் கட்டண உயர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, கட்டண உயர்வை தடுத்து நிறுத்தினோம்.
மின் கட்டண உயர்வு தொடர்பான கோப்பிற்கு முதலமைச்சர் ரங்கசாமியை மிரட்டி கையெழுத்து வாங்கி உள்ளனர். ரேஷன் அரிசி போடவில்லை, அறிவித்த திட்டங்களை செயல் படுத்தவில்லை என கூறினார்.
புதுவை என்.ஆர்.காங்கிரஸ் பாஜக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், அதை முழுமையாகத் திரும்பப் பெறக் கோரியும் மின்துறையை தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டிஜிட்டல் மின் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் புதுச்சேரியில் இண்டியா கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நாளை புதன்கிழமை செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது
கவர்னர் கைலாஷ்நாதன் மரப்பாலம் வழியாக அரிக்கன்மேடுக்கு ஆய்வு செய்ய நேற்று சென்றார். வழக்கமாக கவர்னர் வரும்போது, டிராபிக் அனைத்தையும் நிறுத்தி வழி ஏற்பாடு செய்யப்படும். ஆய்வு முடித்து கவர்னர் திரும்பியபோது, முருங்கப்பாக்கத்தில் வழக்கமான டிராபிக்கில் கவர்னர் காரும் சிக்கியது. போக்குவரத்து போலீசார் என்ன செய்வது என தெரியாமல், அவசர அவசரமாக போக்குவரத்தை சரிசெய்து கவர்னர் காருக்கு வழி ஏற்படுத்தினர்.
புதுச்சேரி கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கோடை விடுமுறை 12 நாட்கள் நீடிக்கப்பட்டன. இந்த விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் முழு நாளும் பள்ளிகள் இயங்கும் என அறிவித்து அட்டவணையை வெளியிட்டது. 5 சனிக்கிழமைகள் முழு நாளாக பள்ளிகள் இயங்கிய நிலையில் அடுத்து வரும் 7 சனிக்கிழமைகளில் அதாவது, செப்-21, 28, அக்-5, 19, 26, நவ-9, 23 ஆகிய தேதிகளில் அரைநாள் மட்டும் வகுப்புகளை நடத்தப்படும்.
புதுவையில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்ப பெற அதிமுக சார்பில் இன்று நடைப்பெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டு பேசிய எம்எல்ஏ நேரு ஆட்சியாளர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் மக்கள் நலனில் அக்கறையில்லை மின் துறையை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் என்ன சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக செயல்படாத திமுக பந்த் போராட்டம் அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என பேசினார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாச்நாதன் இன்று வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்துச் செய்தியில் மனித சமுதாயத்திற்கு அன்பு, இரக்கம், மனித நேயம் ஆகியவற்றை போதித்தவர் நபிகள் நாயகம் சமத்துவம் நிறைந்த மனித சமுதாயத்தை உருவாக்குவதற்கான இலட்சியத்தை முன்வைத்தவர். அவரது பிறந்த நாளை இஸ்லாமிய மக்கள் மிலாது நபி விழாவாக கொண்டாடி வருகிறார்கள் என்றார்.
புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க பல்லாவரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதில் உயிரிழந்தார். இதையடுத்து, தனியார் மருத்துவமனையின் பதிவை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு உத்தரவை ரத்து செய்து, மேலும் 4 வாரங்களுக்குள் தனியார் மருத்துவமனை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலியார்பேட்டை தொகுதியில் குழந்தை ஏரியின் கிழக்கு கரையின் மேல் அரும் பார்த்த புரம் வழிச்சாலை வேல்ராம்பட்டு பிரதான சாலை இணைப்பதற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது. இந்த பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.