Pondicherry

News March 30, 2024

எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாமன்றத்தை பாஜக உருவாக்கும்

image

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி பாஜக அமைச்சர் சாய் சரவணன் குமார், கடந்த 10 ஆண்டுகளில் பாரத பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார். மேலும் இந்தியா முழுவதும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக 543 தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் உருவாக்குவார் என்று தெரிவித்தார்.

News March 30, 2024

புதுவை: இறுதி வேட்பாளர் பட்டியல்

image

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 7 கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் 19 சுயேட்சைகள் என 26 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக வேட்பாளர் பட்டியலை புதுச்சேரி தேர்தல் நடந்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் இன்று அறிவித்துள்ளார்.

News March 30, 2024

புதுச்சேரிக்கு மாற்றம் தேவை எடப்பாடி பழனிசாமி பேச்சு

image

மக்களவை தேர்தலையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரி தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தை இன்று (30-3-2024) மேற்கொண்டார். புதுச்சேரி உப்பளம் சாலை, புதிய துறைமுகம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கலந்து கொண்டு புதுச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்புவதாக கூறினார்.

News March 30, 2024

புதுச்சேரி மத்திய சிறைக்கு வீசப்பட்ட பார்சல்

image

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் கிடந்த பார்சலில் இருந்து 5 செல்போன்கள், குட்கா, பீடி உள்ளிட்டவற்றை காவலர்கள் நேற்று கைப்பற்றினர். காலாப்பட்டு மத்திய சிறைக்கு பார்சல் வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதுச்சேரி மத்திய சிறைக்கு வீசப்பட்ட 5 செல்போன்கள், வைஃபை மோடம், பீடி, குட்கா பார்சலை பறிமுதல் செய்தனர்.

News March 30, 2024

புதுச்சேரியில் 2-வது நாள் நடந்த குதிரையேற்ற போட்டி

image

ஆரோவில்லில் உள்ள ரெட் எர்த் குதிரையேற்ற பள்ளியில் ஆண்டுதோறும் குதிரையேற்ற போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி 25-வது தேசிய குதிரையேற்ற போட்டி 28-ந்தேதி தொடங்கியது. 2-வது நாளான நேற்று 110 செ.மீ, 120 செ.மீ. உயரம் தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டிகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

News March 30, 2024

சோதனை சாவடியில் ஆய்வு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று இரவு வாஞ்சுயூரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்கு பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் பணி புரிகிறார்களா சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

News March 30, 2024

வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக புதுச்சேரியில் 27 பேரின் வெட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று(30.3.24) கடைசி நாளாகும், மாலை 5 மணி வரை தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம். இந்நிலையில் புதுச்சேரியில் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள்? என்ற இறுதி விவரம் தெரியவரும்.  

News March 30, 2024

புதுவை: 20 பேருக்கு வயிற்றுப்போக்கு

image

தொண்டமாநத்தம் சமாதி தெருவில் நேற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ராமநாதபுரம் ஜிப்மர் கிளை மருத்துவமனையில் அவர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். அப்போது, சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குடிநீர் மாதிரி களை அதிகாரிகள் ஆய்வுக் காக எடுத்து சென்றனர்.

News March 29, 2024

புதுவை: முதன்முறை வாக்காளர்கள் 28,921 பேர்

image

புதுவை தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது, புதுவைக்கு ஏற்கனவே 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். மேலும் 10 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஏப்ரல் முதல் வாரத்தில் வருகை தர உள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் ரூ.3.56 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.3.51 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. மேலும் முதல்முறை வாக்காளர்கள் 28,921 பேர் என்று கூறினார்.

News March 29, 2024

புதுவை: 20 பேருக்கு வயிற்றுப்போக்கு

image

தொண்டமாநத்தம் சமாதி தெருவில் நேற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ராமநாதபுரம் ஜிப்மர் கிளை மருத்துவமனையில் அவர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். அப்போது, சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குடிநீர் மாதிரி களை அதிகாரிகள் ஆய்வுக் காக எடுத்து சென்றனர்.