Pondicherry

News April 1, 2024

காரைக்காலில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

image

வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் இந்தியா கூட்டணி, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து நேற்று காரைக்காலில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், நாக தியாகராஜன், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 31, 2024

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து 

image

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,  இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்று தரப்படும், மின்துறை தனியார்மயமாக்கப்படாது, ரேஷன் கடைகள் திறக்கப்படும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு உள்ளூர் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

News March 31, 2024

உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ஆளுநர் ஆறுதல்

image

புதுச்சேரி வசந்தம் நகரில் இன்று வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் புதுச்சேரி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை புதுச்சேரி ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

News March 31, 2024

புதுச்சேரி பிரச்சாரத்தில் பரபரப்பு

image

புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது கட்சியினருடன் புதுச்சேரி ஜீவா நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் இன்று மதியம் பிரச்சாரம் செய்தார். அப்போது வைத்திலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதட்டமான சூழல் உருவானது. இதையடுத்து மற்ற நிர்வாகிகள் வைத்திலிங்கத்தை மீட்டு அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். 15 நிமிடம் ஓய்வெடுத்த வைத்திலிங்கம் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

News March 31, 2024

புதுவை விபத்து: கான்ட்ரக்டர், சூப்பர்வைசர் மீது வழக்கு பதிவு

image

மரப்பாலம் பகுதியில் வசந்த் நகர் என்ற பகுதியில் வாய்க்கால்பணியின் போது இன்று விபத்து ஏற்பட்டது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், முதலியார்பேட்டை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணம் எதுவும் இன்றி வேலை செய்துள்ளனர். இதனையடுத்து கான்ட்ரக்டர் , சூப்பர்வைசர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 31, 2024

புதுவையில்: 90 % வாக்கு வரவேண்டும்

image

கதிர்காமம் தொகுதியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அறிமுக கூட்டம் தனியார் திருமண நிலையத்தில் இன்று நடந்தது. எம்எல்ஏ கேஎஸ்பி. ரமேஷ் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, பேசியதாவது. புதுவையில் மக்கள் நல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனால் தைரியமாக மக்களிடம் வாக்கு கேட்கலாம். மேலும் 80 முதல் 90 சதவித வாக்குகள் நமக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.

News March 31, 2024

சுவர் இடிந்து விபத்து: 5 பேர் பலி

image

புதுச்சேரி, மரப்பாலம் வசந்த் நகரில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல், ராஜேஷ்கண்ணா ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

News March 31, 2024

சுவர் இடிந்து விபத்து: உயிரிழப்பு மேலும் உயர்வு

image

புதுச்சேரி, மரப்பாலம் வசந்த் நகரில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாய்க்கால் தூர்வாரும்போது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் சிக்கிச் கொண்டனர். அதில் சம்பவயிடத்திலே ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்தனர்.

News March 31, 2024

புதுச்சேரி தொகுதி எப்படி மக்களே?

image

மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் பற்றி பார்ப்போம். இங்கு வைத்திலிங்கம்(காங்), நமச்சிவாயம்(பாஜக), தமிழ்வேந்தன்(அதிமுக) ஆகியோர் களம் காண்கின்றனர். இந்நிலையில், இத்தொகுதியில் 3 முனை போட்டி நிலவுவதால், யாருக்கு மகுடம் சூட்டும். இத்தேர்தல் குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?

News March 31, 2024

புதுச்சேரியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

image

புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையில் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து ஆட்சி அமைத்தாலும் ஆளுநர் அனுமதி கொடுத்தால்தான் எதையும் செயல்படுத்த முடிகின்றது என்று தெரிவித்தார்.