India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை மக்களவைத் தேர்தலில் 26 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள், முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் பேசியது, புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, புதுவை மாநிலத்தில் மொத்தம் 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் தகவல் சீட்டு வரும் 5ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுவதாக கூறினார்.
மக்களவைத் தேர்தலில் முன்னிட்டு தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் வரும் 19 ஆம் தேதி அரசு துறைகள், அரசு பொதுத்துறைகள், சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்திற்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் முதல்வர் ரங்கசாமி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சேதராப்பட்டில் தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டு 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரியில் அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன் புதுச்சேரியில் பட்டியலை வைத்துக்கொண்டு வீடு வீடாக ரூ.500, ரூ.1000 என்று பணம் வழங்கப்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படுகிறார்கள் புதுச்சேரியில் தேர்தலில் சமநிலை இல்லை எனவே நடைபெற உள்ள வாக்கு பதிவை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என மாநில செயலாளர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரிக்கு ஏப்.7 ஆம் தேதி வருகை தருகிறார். தொடர்ந்து புதுச்சேரி புதிய துறைமுக வளாகத்தில் இந்தியா கூட்டணி சாா்பில் நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசுகிறாா். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திமுக புதுவை மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான சிவா செய்து வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தபடி தபால் வாக்களிக்க இந்திய தேர்தல் கமிஷன் முதல் முறையாக அனுமதித்துள்ளது. அதன்படி லாஸ்பேட்டை சேர்ந்த 105 வயது மூதாட்டி அஞ்சலை வீட்டில் இருந்தபடியே வாக்களித்தார். இதற்காக அவரது வீட்டில் அட்டைகளில் மறைக்கப்பட்ட வாக்குப்பதிவு அறை அமைத்து வாக்குப்பெட்டியை அதிகாரிகள் வைத்தனர். அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.
புதுச்சேரியில் பல இடங்களில் “குளிக்க தடை” என்ற எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் வாலிபர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். இதைகண்ட, ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து வெளியே அழைத்து வந்து சுமார் 12 கி.மீ. தூரத்துக்கு அவர்களை நடத்தியே அழைத்து சென்று எச்சரிக்கை பலகையில் எழுதியுள்ளதை படித்த பின்னர், அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
புதுவையை சேர்ந்த தேவி என்பவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடியுள்ளார். அப்போது டெலிகிராம் மூலம் மர்ம நபர்கள் லிங்க் அனுப்பி அவரிடமிருந்து ரூ.1,39,000 -த்தை ஏமாற்றியுள்ளனர். மேலும், இதே போன்று கார்த்திக் என்பவரிடம் ரூ.14,000, சந்திரசேகர் என்பவரிடம் ரூ.8,000 ஏமாற்றி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை இந்திரா காந்தி சிலை சதுக்க பகுதியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவா் செல்வகணபதி எம்.பி.நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்தத் தோ்தலில் நமச்சிவாயம் வென்றால் அவர் மத்திய அமைச்சராகும் வாய்ப்புள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்காக புதுவைக்கு வருகிறாா். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேதி விரைவில்அறிவிக்கப்படும்” என கூறினார்.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டை பகுதியில் ஆர்த்தி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழங்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வழக்கில் காவல்துறை முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் பெற்றோர் இன்று டிஜிபி அலுவலகத்தில் டிஜிபியிடம் மனு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.