India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு E-Challan Spot Fine Machine மூலம் வழக்கு பதியப்பட்டு SMS அனுப்பியும் பலர் அபராதம் தொகையை செலுத்தாமல் உள்ளனர். 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட போலிஸ் ஸ்டேஷன் (அ) https://echallan.parivahan.gov.in ஆன்லைன் மூலம் அபராதத்தை செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் ஓட்டுநர் உரிமம் ரத்து, இடைக்கால தடை செய்யப்படும் என காவல்துறை ஆணையர் செல்வம் எச்சரிக்கை செய்துள்ளார்.
புதுவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கோவிந்தராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆண்டு தோறும் தொழில் பயிற்சிகள் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஊக்கத்தொகையுடன் கூடிய தொழில் கூட பயிற்சிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கு மாவட்ட தொழில் மைய இணையதளத்தில் அக்டோபர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
உலக அளவில் முதியோர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்நாள் வலியுறுத்துகிறது. முதியோர்கள் வாழ்வில் கூடுதல் கவனிப்பு தேவைப்படும் ஒரு கட்டத்தை எட்டும் போது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய நமது பொறுப்பை இந்நாளில் உறுதி செய்வோம் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி சர்வதேச முதியோர் தினம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்திய சக்கர நாற்காலி கூடை பந்து கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிக்கான 8-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி குவாலியரில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் புதுச்சேரி வீரர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி சென்றுவர பயண செலவை முதல்வர் நிவாரணையில் இருந்து 3.20 லட்சத்திற்கான காசோலையை இன்று சட்டப்பேரவையில் வழங்கினார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள யூனியன் பிரதேசங்கள் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கள்ளுக்கடை மற்றும் மதுக் கடைகளையும் மூட வேண்டும் என புதுச்சேரி கலால்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மதுபானபாருடன் கூடிய உணவகங்களிலும் மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பார்த் இலவச மருத்துவக்காப்பீடு திட்டம் புதுச்சேரியில் 2019ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இத்திட்டம் 6 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதன் துவக்கத்தை கொண்டாடும் வகையில் மத்திய அரசும் மாநில அரசும் இணைத்து ‘ஆயுஷ்மான் பார்த் பக்வாரா என்ற நடைப்பயணத்தை புதுச்சேரி அரசால் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நடைப்பயணத்தை முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவை முன்பு துவக்கி வைத்தார்.
புதுச்சேரி கேரள சமாஜம் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் புதுச்சேரியிலிருந்து வெளி மாநிலங்களுக்கு விமான சேவை தொடங்கப்படவுள்ளது. அதே நேரத்தில், புதுச்சேரியிருந்து கேரளத்துக்கு விமான சேவை தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதன்படி, புதுச்சேரியிலிருந்து கொச்சிக்கு விமான சேவை இயக்க பரிசீலிக்கப்படும் என்றார்.
பாகூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் 7 வயது சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் பாகூர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், பாகூர் துணை ஆய்வாளர் நந்தக்குமார், நேற்று போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
காரைக்கால் புகழ்பெற்ற ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் பல ஏக்கர் நில மோசடி செய்து போலி பட்டா போலி கையெழுத்து என விசாரணை நீண்டு கொண்டு போகும் விவகாரத்தில் பெண் அரசு நில அளவர் ரேணுகாதேவி கைது செய்யப்பட்டார். லட்சக்கணக்கில் பணம் பெற்று கோயில் நில மோசடிக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு துணை முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா சென்னையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.