India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரமலான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை (ஏப்ரல்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நாளை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உள்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் என்று புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரமலான் பண்டிகையையொட்டி நாளை (ஏப்.11) விடுமுறை என்பதால் புதுச்சேரி ஜிப்மரில் புறநோயளிகள் பிரிவு இயங்காது என ஜிப்மர் மருத்துவனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், அவசர சிகிச்சை உள்ளிட உட்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
புதுவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று பிரச்சாரத்தில் பேசியதாவது, புதுச்சேரி மாநிலத்திற்கு பல்வேறு மாநில உரிமைகளை தடுத்து நிறுத்திய பெருமை காங்கிரஸ் கட்சியினரை சாரும். செயல்படுத்த முடியாத கவர்ச்சி திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. ஆகவே காங்கிரஸ் கட்சியை வருகிற தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசினார்.
புதுவையில் நகர பகுதியில் சாலையோர பகுதிகள் ஆக்கிரமித்து பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் புதுவை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், ரமேஷ்பாபு மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று காமராஜர் சாலையில் புத்துமாரியம்மன் கோவில் போன்ற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பில் இருந்த இளநீர், காய்கறி, பழக்கடைகளை அகற்றினார்கள்.
புதுவை கோரிமேடு எல்லைப் பகுதியில் நேற்று மாலை தன்வந்திரி காவல் நிலைய போலீஸாா் உதவியுடன் தோ்தல் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சென்னையில் பிரபல நகை தயாரிப்பு மினி வேன் வந்தது. அதைச் சோதனையிட்டபோது சரியான ஆவணங்கள் இல்லாததால் 50.56 லட்சம் மதிப்புள்ள 1.141 கிலோ தங்கநகைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, மாவட்ட உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் ரோந்து பணி மேற்கொண்டு இருந்த கோட்டுச்சேரி போலீசார் கழுகுமேடு பகுதியில் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மணிமாறன் என்பவரிடம் சோதனை செய்தனர். அப்பொழுது அவரிடம் இருந்த கணக்கில் வராத ரூ.86 ஆயிரத்தை கைப்பற்றி வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்ட உத்தரவில், இந்திய அரசின் மீன்வள அமைச்சகத்தின் துணை ஆணையர் உத்தரவுப்படி மீன்வளத்தை பாதுகாத்திட கடந்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தியது போல், வரும் ஏப்ரல். 15 ஆம் தேதி முதல் ஜூன்.14 ஆம் தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஏப்ரல்.17 மற்றும் 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்.19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளிகளுக்கு தேர்தலுக்கு முன்பு கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர். அதற்காக புதுவைக்கு 8 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்துள்ளனர். வீரர்கள் லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கம், அபிஷேகப்பாக்கம், வில்லியனூர் & கிருமாம்பாக்கத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இன்று முதல் பதற்றமான வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
புதுவையில் 100 சதவீத வாக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உப்பளம் தொகுதி எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை (வயது100) பாராளுமன்ற தேர்தலையொட்டி அவரது வீட்டுக்கு தபால் ஓட்டு பெட்டியுடன் அதிகாரிகள் சென்றனர். அங்குள்ள பிரத்யேக அறையில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். அந்த ஓட்டு சீட்டை அதிகாரிகள் வாக்கு பெட்டியில் போட்டனர்.
Sorry, no posts matched your criteria.