India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் பாராமெடிக்கலில் உள்ள அரசு படிப்புகளில் ஒதுக்கீடு, பிற மாநிலத்தினர் என்.ஆர்.ஐ. உள்ள ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் மாப் அப் சுற்று சீட் ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சீட் ஓதுக்கீடு உத்தரவை பதிவிறக்கம் செய்து வரும் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் சேரலாம். ஷேர் செய்யவும்
தொண்டமாநத்தம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் தீபாவளி பரிசாக விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார். ஷேர் செய்யவும்
புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கும் பணி கடந்த 7 ஆண்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டது. தீபாவளிக்கு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இந்த நிலையில் ரேஷன் கடைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ரேஷன் கடை ஊழியர்கள் கடைகளை சுத்தம் செய்து மிஷின்களை நேற்று தயார் செய்தனர்.
வில்லியனூர் வீ. தட்டாஞ்சாவடி ரயில்வே தண்டவாளம் பகுதியில் ரயில் மோதியதில் முதியவர் பலியாகியுள்ளார். இதனை அறிந்த பொதுமக்கள் வில்லியனூர் காவல் நிலையத்திற்கு, ரயில் நிலைய காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் மற்றும் வில்லியனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி புதுச்சேரியில் 196, காரைக்காலில் 38, மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் 18 ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களை வருகிற 14ஆம் தேதிக்குள் விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவினை கல்விதுறை துணை இயக்குனர் இன்று வெளியிட்டுள்ளார்.
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் , நாளை முதல் 11ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படிப்புக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் தங்களின் விண்ணப்ப படிவங்களை வருகிற 24ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த விவரம் நவம்பர் மாதம் 8ஆம் தேதி தெரிவிக்கப்படும். அதே மாதம் 25ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுவை முதல்வர் அறிவித்த 10 கிலோ அரிசி போடுவதன் மூலம் கையாளுதல் ரூ. 20 லட்சம் மட்டுமே கிடைக்கும் ஆனால் ரேஷன் கடை ஊழியர்களின் மாத சம்பளத்திற்கான தொகை ரூ. 60 லட்சம் ஆகும். சிவப்பு அட்டை – 20 கிலோ, மஞ்சள் அட்டை 10 கிலோ அரிசி அந்தோதியா திட்ட அட்டைக்கு 35 கிலோ அரிசி என தொடர்ந்து வழங்கினால் மட்டுமே ஊழியர்களுக்கு மாத சம்பளம் தொடர்ந்து வழங்க முடியும் என நியாய விலை கடை ஊழியர்கள் நல சங்கம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது. புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் முதல்வர் ரங்கசாமி தவெக கட்சி மாநாட்டுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை என்றும் அழைப்பு வந்தால் பார்ப்போம் என்று தெரிவித்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தீபாவளிக்கு முன்னதாக அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு இலவசமாக 10 கிலோ அரிசியில் இரண்டு கிலோ சர்க்கரை, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல் நமது புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.