Pondicherry

News April 30, 2024

புதுச்சேரி ஆளுநர் ராதாகிருஷ்ணன் மே தின வாழ்த்து

image

உழைக்கும் மக்களின் பெருமையையும் தியாகத்தையும் உலகத்திற்கு பறைசாற்றும் இந்த சர்வதேச உழைப்பாளர் தினத்தில் உலகமெங்கும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பாளர்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைத்து நிலையிலும் புதுச்சேரி அரசு துணை நிற்கும் என்று புதுச்சேரி ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

News April 30, 2024

காரைக்கால் மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை

image

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து குழந்தை அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகவியல், இதயவியல் மற்றும் மனநல மருத்துவம் சம்பந்தமான சிறப்பு மருத்துவர்கள் வரும் மே.3ஆம் தேதி அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தந்து காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 30, 2024

வதந்தியை நம்பவேண்டாம்: புதுச்சேரி பல்கலைக்கழகம்

image

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புக்கு ஏப்.30 கடைசி தேதி என வெளியான செய்திக்கு முதுகலை படிப்புக்கு என்று எந்த கடைசி தேதியும் நிர்ணயிக்கவில்லை என்றும், மாணவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pondiuni.edu.in கிடைக்கும் தகவல்களை நம்புமாறு தெரிவிக்கப்பட்டது.

News April 30, 2024

பஜாஜ் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

image

புதுச்சேரி செட்டி வீதியில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் பிரபல ரவுடிகளை கையில் வைத்துக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் போல் தொலைபேசியில் கடனாளிகளை மிரட்டும் பஜாஜ் நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரி சமூக அமைப்புகளுடன் சட்டமன்றத் உறுப்பினர் நேரு தலைமையில் பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகம் முன்பு இன்று போராட்டம் நடைபெற்றது.

News April 30, 2024

புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

image

புதுச்சேரி கடற்பகுதியில் நெகிழி போத்தல்கள் மற்றும் மணல் மூட்டை கட்டி அதில் சவுக்கை போன்ற மரங்களின் கிளைகளை கொண்டு கடல் பகுதியில் இறக்கிவிட்டு அதன் மீது ஹூக்கான் (எ) அக்டி முறையில் சில மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறையில் மீன்பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி அரசின் மீன்வளத்துறை சார்பில் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

News April 30, 2024

நிலக்கரி வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு

image

காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி லாரிகளில் பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்லப்படும்போது சாலையில் நிலக்கரி துகள்கள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் காரைக்கால் வழியாக நிலக்கரி ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு காரைக்கால் போக்குவரத்து காவல்துறை சார்பில் நேரக் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. இதில் காலை 7 முதல் 10 மணி வரையும், மாலை 4 முதல் 9 மணி வரை இயக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

News April 29, 2024

புதுச்சேரியின் புனித இதய பசிலிக்கா சிறப்பு!

image

புனித இதய பசிலிக்கா ஆலயம் புதுச்சேரி ரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. 1902- 1907ஆம் ஆண்டு இவ்வாலயம் கட்டப்பட்டது. மேதகு.காந்தியால் 1907 இல் அருட்பொழிவு செய்து முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 2008-2009 இவ்வாலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. குறிப்பாக பசிலிக்காவை சேர்த்து தமிழகத்தில் 6, இந்தியாவில் 20 மற்றும் ஆசியாவில் 50 பசிலிகாக்களும் உள்ளன.

News April 29, 2024

புதுவையில் மாணவர்கள் தவிப்பு

image

புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை & முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு கியூட் நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதன்படி கியூட் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்ய இணையத்தில் தேடி வருகின்றனர். ஆனால் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவம் கிடைக்கவில்லை. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதை கால நீட்டிப்பு செய்ய கோரிக்கை வைத்தனர்.

News April 29, 2024

போதை பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு

image

புதுவை திருக்கனுார், காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில் கஞ்சா போதை பொருட்கள் தொடர்பான இளைஞர்கள் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. லிங்காரெட்டிப்பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் முன்னிலை வகித்தனர்.
இதில் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

News April 28, 2024

புதுவை மக்களுக்கு மின்துறை எச்சரிக்கை

image

புதுவை அரசு மின்துறை (தெற்கு) கோட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோயில், வாதானூர், கரியமாணிக்கம் உட்பட்ட மின் நுகர்வோர்கள், மின்கட்டணம் நிலுவை கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும்.தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்துறை தெற்கு கோட்டம் செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.