India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்கால் மாவட்டத்தில் நாளை (03-05-2024) திருநள்ளாறு உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த மின் பாதை மூலம் மின்சாரம் பெறும் அத்திப்படுகை பகுதி முழுவதும் நாளை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சுரக்குடி மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் புதுச்சேரி, தாலுகா வாரி பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9160322122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
புதுச்சேரியில் உள்ள மணவெளி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு அர்ஜுனன் திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாண உற்சவத்தில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் மற்றும் அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி காந்தி வீதியில் நேற்று மாலை 5:00 மணிக்கு, 45 வயது மதிக்க தக்க நபர், உடலில் ஒட்டு துணி இன்றி நிர்வாணமாக நடந்து சென்றார். தொடர்ந்து அஜந்தா சிக்னல் நோக்கி வேகமாக ஓடியவர் திடீரென நேரு வீதி நோக்கி வேகமாக நடந்தார். சாலையில் சென்ற பெண்கள் அவரை கண்டு முகம் சுளித்தனர். தகவலறிந்து வந்த பெரியக்கடை போலீசார் அவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர் மனநலம் பாதிக்கபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவையில் டெங்கு பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை இயக்குநரை சந்தித்து பாஜக எம்எல்ஏ அசோக்பாபு நேற்று மனு அளித்தார். அதில், டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு துறையின் மூலம் ட்ரோன் கருவியை பயன்படுத்தி, புதுவை மாநிலத்தில் வீடு, கழிவுநீர் வாய்க்கால் & நீர் நிலைகளில் தேங்கி உள்ள தண்ணீரில் தடுப்பு மருந்து தெளித்து டெங்கு இல்லாத புதுவையாக மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதுவை பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நவகிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பஞ்சமூர்த்திகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்த நேரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மக்கள் நலக்கழகம் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் மணிகண்டனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு அவசிய மற்றும் அவசர தேவையான மாஸ்டர் பிளான் பணியை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டுகிறோம் காரைக்கால் ரயில் நிலையத்திற்கு காரைக்கால் அம்மையார் பெயரை சூட்ட மத்திய ரெயில்வே துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரியில் பல அழகிய இடங்கள் அமைந்துள்ளன.பழங்கால நினைவு சின்னங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. குறிப்பாக புதுச்சேரி கடற்கரையையொட்டி பல நினைவு சின்னங்கள் அமைந்துள்ளன. தற்போது காந்தி சிலையும், அதனைச் சுற்றியுள்ள கல் தூண்களும் சுத்தமின்றி, பொலிவிழந்த நிலையில் காட்சியளிக்கின்றன. காந்தி சிலையின் முகத்துக்கு நேராக அமைக்கப்பட்டுள்ள இரண்டு எல்இடி மின்விளக்குகள் மட்டுமே எரிகின்றன
புதுவை- குமுளி வழித்தடத்தில் இயக்கப்படும் பழைய பஸ்சுக்கு பதிலாக, புதிய பிஆர்டிசி பஸ் சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, தேனி வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு குமுளி சென்றடைகிறது. புதுவையில் இருந்து குமுளிக்கு முன்பதிவுடன் சேர்த்து பஸ் டிக்கெட் கட்டணமாக ரூ.450 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லாஸ்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் புதுமையான கற்பித்தல் முறைகள் குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கில் புதுவையின் 4 பிராந்தியங்களிலும் இருந்து ஆசிரியர்கள் கலந்து கொண்டு கற்பித்தல் முறை பற்றி கூறினார். கேந்திர வித்யாலாய சங்கேதனின் முன்னாள் துணை ஆணையர் பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறந்த 10 புதுமையான கற்பித்தல் முறைகளை தேர்வு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.