India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து காரைக்கால் வரை தேசிய மாணவர் படையை (என்.சி.சி.) சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் சாகச பயணம் மேற்கொள்கின்றனர். இந்த சாகச பயணம் அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி லெப்டினன்ட் கமாண்டர் லோகேஷ் தலைமையில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் படகை இயக்குவது குறித்து அவர்களுக்கு என்.சி.சி. அலுவலர்கள் நேற்று பயிற்சி அளித்தனர்.
ஒதியம்பட்டு சேர்ந்த ஜெயபால் – சோகத்த பச்சையம்மாள் தம்பதியினரின் மகள் மேனகா. இவர் மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +2 பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில், நேற்று வெளியான தேர்வு முடிவில் மேனகா குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலிசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி சேர்ந்தவர் ஞானவடிவேல். இவர் கோட்டுச்சேரி பகுதியில் தனக்கு சொந்தமான குளத்தில் மீன் வளர்த்து அதை விற்று தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 பேர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்துள்ளனர். அப்பொழுது, ஞானவடிவேல் 3 பேரையும் பிடித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 6566 மாணவர்களும் 7446 மாணவிகளும் ஆக மொத்தம் 14012 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி 5867 மாணவர்களும் 7081 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 92.41 சதவீத மாண்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரிக்கு பொது விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடற்கரைக்கு வருவோருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கழிப்பிடங்கள்தான்.கலவைக் கல்லூரி அருகே அமைக்கப்பட்ட ‘பயோ டாய்லெட்கள்’ செயலிழந்துவிட்டன. மக்கள் வருகைக்கு ஏற்ப கழிப்பிட வசதி ஏற்படுத்துவது மிக அவசியம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. புதுவையில் முதல் நாளிலேயே 100.4 டிகிரி வெயில் பதிவானது. வார இறுதி விடுமுறையை புதுவையில் கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளும் தங்கும் விடுதிகளில் முடங்கி இருந்தனர். மாலை 5 மணிக்கு பின்னரே அவர்கள் வெளியில் வரத் தொடங்கினார்கள். இதன் காரணமாக புதுவை கடற்கரை, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள், மக்கள் கூட்டம் அலைமோதியது.
புதுவை பாண்டி மெரினாவிலும் தற்போது ‘ஈபிள் டவர்’ அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் 55 அடி உயரத்தில் ஈபிள் டவர் இரும்பினால் அமைக்கப்படுகிறது. இதற்காக 5 அடி உயரம் கொண்ட பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ‘கேக்’ வெட்டி கொண்டாடுவதற்கு வசதிகளும் செய்யப்பட உள்ளது. இதற்காக சிறிய தொகை கட்டணமாக வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கோடை விடுமுறையை முன்னிட்டு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற பொழுது போக்கு ஒரு நாள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துத்திப்பட்டு சி.ஏ.பி. சீக்கெம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களான ம.க.ப. ஆனந்த், தங்கதுரை, புகழ் மற்றும் பிரபலமான யூடியூப்பர்ஸ் பங்கேற்றனர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்
புதுவை துணைநிலை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இன்று அறிக்கையில், நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் தனது உயிரை இழந்த ராணுவ வீரருக்கு எனது சார்பாகவும் புதுச்சேரி மக்கள் சார்பாகவும், வீரவணக்கமும் அஞ்சலியும் செலுத்துகிறேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறப்பட்டுள்ளது.
புதுவை ஜவகர் பால்பவன் கோடை வகுப்புகளில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்தனர்.
இந்தாண்டு அரசு பள்ளிகளின் விடுமுறை காலம் மே முதல் தேதி இருந்து துவங்கியதால், கோடை கொண்டாட்ட வகுப்புகள் நேற்று முதல் துவங்கி 30 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. நேற்று காலை ஐந்து இடங்களில் சேர்க்கை நடந்தது. இதனால் பால்பவனில் பெற்றோர்கள் கூட்டம் அலை மோதியது.
Sorry, no posts matched your criteria.