India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்காலில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.6) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புதிய பேருந்து நிலயம், முதல் பாரதியார் வீதி காமராஜ் நகர், இலைக்கார தெரு, சின்னகன்னு செட்டி தெரு, பிரகார தெரு, முருகாராம் நகர், ஸ்ரீ ராம் நகர், வலத்தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“மக்களை தேடி மாவட்ட ஆட்சியர்”நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு கொம்யூன் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய இடத்திற்கு பட்டா பெயர் மாற்றம் கேட்டு திருநள்ளாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான சிறப்பு முகாம் வரும் 7.11.24 வியாழக்கிழமை அன்று திருநள்ளாறு கியூ காம்ப்ளெக்ஸ் வளாகத்தில் நடைபெறும் என மாவட்டம் ஆட்சியர் அறிவிப்பு.
புதுச்சேரி துணை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஹைதராபாத் ஐஎன்சிஓஐஎஸ் மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து வீராம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் இன்று நிலநடுக்கம் மற்றும் சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்
மும்பையைச் சோர்ந்த 16 வயது சிறுமி புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், வெளியே சென்ற அவரை, ஆட்டோவில் சென்னைக்கு கடத்தி அங்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஈடுபட்டதாக ஆட்டோ ஓட்டுநர் காஜாமுகைதீன் உள்ளிட்ட சென்னையைச் சோர்ந்த 3 பேரை பெரியகடை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் மும்பையை சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை பேசி ஆட்டோவில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் காஜா மொய்தீனை பெரியகடை போலீசார் கைது செய்தனர். மேலும் காஜா மொய்தீன் மூலமாக புதுவைக்கு சுற்றுலா வந்த சென்னையை சேர்ந்த 5 இளைஞர்கள் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டது. விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
காமன்வெல்த் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் புதுச்சேரி, கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக்கல்லூரியின் பி.பி.ஏ முதலாம் ஆண்டு மாணவர் விஷால் 59 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவரை சட்டப்பேரவையில் நேற்று பாராட்டினர்.
தீபாவளி பண்டிகையின்போது உருவாகும் காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை அளவீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் தீபாவளி முந்தைய தினம் மற்றும் தீபாவளி தினத்தன்றும் 24 மணி நேரம் ஒலி மற்றும் காற்று மாசு அளவை கண்காணித்து வருகிறது. தீபாவளி அன்று இந்த மதிப்பு 4 மடங்கு உயர்ந்து 240 மைக்ரான் அளவு பதிவாகி இருந்தது.
புதுச்சேரியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை கொண்டாட வெளிமாநிலத்தைச் சேர்ந்த பலர் அதிக அளவில் குவிந்தனர். இதனால் மது விற்பனை அதிக அளவில் நடந்தது. கடந்த 4 நாட்களில் மது விற்பனை 2 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. அதாவது ரூ.36 கோடி விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் அதிகம் கிடைக்கும்.
புதுச்சேரி பிள்ளைத்தோட்டம், கங்கை அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அமலா இவரது மகன் திருமுருகன் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2 மாதங்களாக மொபைல் போனில் கேம் விளையாடி வந்தார். தாய் கேம் விளையாடியதை கண்டித்ததை அடுத்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியை சார்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கான, பிரிமீயர் லீக் எம்.பி.எல். ‘டி-20’ போட்டி வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுப்பதற்கான நிகழ்ச்சி, திருக்கனூர், விஜய் கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் மொத்தம் 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.
Sorry, no posts matched your criteria.