India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணி தேர்வு, வரும் டிச. 15ஆம் தேதி 4 பிராந்தியங்களிலும் நடக்கிறது. திட்டத்துறை ஆராய்ச்சியாளர் பணிக்கு டிசம்பர் 29ஆம் தேதி காலையிலும், அன்று மதியம் தீயணைப்பு நிலைய அதிகாரி பணி தேர்வும் புதுவையில் மட்டும் நடக்கிறது. இதில் இளநிலை ஆய்வாளர் பணிக்கு 7,000 பேரும், ஆராய்ச்சியாளர் பணிக்கு 4,000 பேரும், தீயணைப்பு நிலைய அதிகாரி பணிக்கு 4,600 பேரும் விண்ணப்பித்துள்ளனர்
புதுவை அரியாங்குப்பம், சீனிவாசா அப்பார்ட்மென்ட் சுந்தர் மனைவி அனிதா, அக்கவுண்டண்ட். இவரது வீட்டில், அலமாரியில், வைத்திருந்த 4.5 சவரன் நகைகள், சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வீட்டில், வேலை செய்த, பாகூர் வள்ளியிடம் விசாரித்ததில் அவர் அடகு கடையில் வைத்தது தெரிய வந்தது. நகையை மீட்டு வள்ளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுவை கூடுதல் வேளாண் இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் தட்டான்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் வாயிலாக வேலையில்லா விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை வருகிற முப்பதாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி கலைபண்பாட்டுத்துறையில் 2023 ஆம் ஆண்டுக்கான கம்பன் புகழ் இலக்கிய விருது, நேரு குழந்தைகள் இலக்கிய விருது, தொல்காப்பியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக எழுத்தாளர்களிடமிருந்து கலை பண்பாட்டுத்துறையில் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://art.py.gov.in/ என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மருத்துவ படிப்பில் என்.ஆர்.ஐ. இட ஒதுக்கீட்டில் சேர போலி ஆவணங்களை சமர்ப்பித்த 44 மாணவர்கள் குறித்து சென்டர் கன்வீனர் ஷெரின் ஆன் சிவன் கொடுத்த புகாரின் அடிப்படையில்புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசார் விசாரணை செய்தனர். புகாரை உறுதிப்படுத்தி 44 மாணவர்கள் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி முதலியாா்பேட்டை அருகே உள்ள அரசுடைமை வங்கிக் கிளை உள்ளது. அங்கு நேற்று முன்தினம் வங்கி ஊழியா்கள் சிலா் பணிக்கு வந்தனா். அப்போது, கழிப்பறை அருகே நாற்காலி இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த ஊழியா்கள் முதலியாா்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் சோதனை செய்ததில் வங்கியில் மா்ம நபா்கள் கொள்ளை முயற்சி செய்து அங்கிருந்த கையடக்கக் கணினி திருடி உள்ளனர்.
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை குறைக்கவும், ரவுடிகளை ஒழிப்பதற்கு ஆப்ரேஷன் திரிசூலம் என்ற திட்டம் துவங்கப்பட்டது. டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் மேற்பார்வையில் நேற்று வாணரப்பேட்டை, கண்டாக்டர்தோட்டம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆயுதம் வைத்திருந்தாக 5 பேர் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக 46 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி நைனார்மண்டபம் குயவர் வீதியைச் சேர்ந்தவர் பொன்னியின் செல்வி, இவரது மகன் வினோத் ஊர்காவல் படை வீரர். அவர் மீது ஆரோவில் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வீட்டில் தூக்க மாத்திரை சாப்பிட்ட வினோத் மயங்கி விழுந்து இறந்தார். புகார்படி முதலியார் பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி வனத்துறை அலுவலகம் கட்டிடத்தின் அருகே பெரியார் நகருக்கு செல்லும் சாலையில் வாய்க்காலில் இன்று 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தான் பேரில் போலீசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.