India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுவையில் இருந்து 510 கி.மீ. தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. மேலும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக கனமழை காரணமாக இன்று புதன்கிழமை (27.11.2024)புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக கனமழை காரணமாக நாளை புதன்கிழமை (27.11.2024)புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 2021ஆம் ஆண்டு 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பிரியதர்ஷினி நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அந்தோணி (எ) குருராஜ் (67), 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க புதுவை அரசுக்கு நீதிபதி சுமதி நேற்று உத்தரவிட்டார். அரசு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார்.
புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்ணின் அந்தரங்க வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பி வைத்து மிரட்டல் விடுத்த நபரை, புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் விசாரணையில் அந்த பெண்ணின் 2-வது கணவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த பாண்டியன் (30) என்பது தெரியவந்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தை தொடர்ந்து காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
இந்திய அரசியலமைப்பு தினத்தை ஒட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களை இந்நாளில் கொண்டாடுவதோடு அவற்றை அன்றாட வாழ்வில் கடைபிடிக்கவும் உறுதியேற்போம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்
புதுவையில் 2025ஆம் ஆண்டில் 39 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு 39 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு காலண்டர் தற்போது தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், விடுமுறை குறித்த செய்திகள் வெளியானது புதுவை மாநில மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று நாகப்பட்டிணத்திற்கு தென்கிழக்கே 880 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 980 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதையடுத்து சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டிணம், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் தெய்வசிகமாணி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வங்கக்கடலில் உருவாக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை (26ம் தேதி) தமிழகம்- புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், புதுச்சேரி பகுதி மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.
Sorry, no posts matched your criteria.