India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெங்கால் சூறாவளி புயல் (ஃபெங்கால்) தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இன்று நவம்பர் 29 ஆம் தேதி 2.30 மணிக்கு உருவாகியுள்ளது. மேலும் தற்போது புதுச்சேரியில் தற்போது மழை பெய்ய தொடங்கியது. தற்போது புதுச்சேரி நகராட்சி அவசர உதவி மையம் பெஃங்கல் புயல் பேரிடர் கால அவசர உதவி எண்கள் அறிவித்தது 0413-2334074 & 1077 அல்லது 1070 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை யொட்டி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (நவ.29) கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது இதனை எடுத்து புயல் சின்னம் உருவானது இந்த நிலையில் புதுச்சேரியில் கன மழை பெய்து வந்தது இந்தப் புயல் மாமல்லபுரம் மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரிக்கு நாளை வெள்ளிக்கிழமை நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது
புதுச்சேரியில் நாளை (நவ.29) மற்றும் நாளை மறுநாள் (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கனமழை எதிரொலி காரணமாக புதுவை, காரைக்காலுக்கு 2 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 30ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஓரிரு பகுதிகளில் மிக கன முதல் அதி கனமழைக்கும், 30ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம்,புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் ஆம்புலன்ஸ்களை வழங்கி உதவ தயாராக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக கனமழை காரணமாக இன்று (28.11.2024) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை வியாழக்கிழமை (28/11/24) விடுமுறை அறிவித்து புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டு உள்ளார்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் சின்னம் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இன்று புதுச்சேரி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலின் சீற்றமும் அதிகரித்து காணப்படுகிறது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது புயலை எதிர்கொள்வது சம்பந்தமாக சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
Sorry, no posts matched your criteria.