India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீடூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து நோணாங்குப்பம், ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது. அப்போது, கரையோரத்தில் உள்ள என்.ஆர்., நகரில், 140 குடும்பங்கள், குயிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. தகவலறிந்த, கமாண்டர் கோபிநாத் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்டு படையினர்,நேற்று வீடுகளில் சிக்கி இருந்த 120 பேரை, படகு மூலம் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
ஃபெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் ஆ.நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார். மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
காரைக்காலில் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும், மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து இது குறித்து இன்று ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் நாளை வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழையின் காரணமாக, வீடூர் அணை திறப்பால் கிராமப்புற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுவதால், பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை (டிச.3) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக புதுச்சேரியில் கனமழை பெய்தது. இந்த நிலையில் நாளை (டிச.3) பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம். முகங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. இதனால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைக்கு ரூ.5,000, சேதமடைந்தது படகுகளுக்கு ரூ.10,000,விவசாய நிலங்களுக்கு ஹெக்டருக்கு ரூ.30,000,உயிரிழந்த மாட்டுக்கு ரூ.40,000, கிடாரி கன்றுக்கு ரூ.20,000 முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20 ஆயிரம்,லேசான பாதிப்புக்குள்ளான வீடுகளுக்கு ரூ.10,000, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் என முதல்வர் ரங்கசாமி இன்று தெரிவித்துள்ளார். SHARE IT
சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் புதுச்சேரி வெள்ளக்காடாக மாறியது. முதல்வர் ரங்கசாமி கடற்கரைச் சாலை, ரயில் நிலையம், கடலூர் சாலை, பாகூர், வில்லியனூர் பகுதிகளை பார்வையிட்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,புதுச்சேரியில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு நிவாரண உதவி கோரி கடிதம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.
வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு புதுவை அருகே கரையை கடத்தது. இதனால் புதுவை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, புதுவையில் கனமழை மற்றும் வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தினால் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.02) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
புதுவையில் இன்று திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பின்பும் வலுவிழக்கவில்லை. மழையால் புதுவை தத்தளித்து வரும் நிலையில், திரையரங்குகள் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.