India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் மழைநீர் தேங்கியுள்ள காரணத்தினால் 17 பள்ளிகளுக்கு நாளை (டிச.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்படுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுவை முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் புதுவையில் மழைநீர் தேங்கியுள்ள 17 பள்ளிகளுக்கு நாளை (டிச.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
புதுச்சேரி, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் முதுகலை சட்ட படிப்பு மற்றும் முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டய படிப்புக்கான 2024-25ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 16ஆம் தேதி நடந்தது. இதில், முதுகலை சட்ட படிப்பில் 4 இடங்களும், முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டைய படிப்பில் 5 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாப்-ஆப் கவுன்சிலிங் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் செய்யவும்
புதுச்சேரி, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் முதுகலை சட்ட படிப்பு மற்றும் முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டைய படிப்புக்கான 2024-25ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 16ம் தேதி நடந்தது. இதில், முதுகலை சட்ட படிப்பில் 4 இடங்களும், முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டைய படிப்பில் 5 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாப்-ஆப் கவுன்சிலிங் வரும் 6ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்.ஆர்.காங்.சார்பில் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வம் துணை சபாநாயகராக இருந்தார். செல்வத்திற்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்த குழாயில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுவை முதல்வர் ரங்கசாமி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், புதுச்சேரி காரைக்காலில் இருந்து இயந்திரப் படகில் 15 காரைக்கால் மீனவா்கள் 3 தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இலங்கை கடற்படையினர் படகை கைப்பற்றி மீனவர்களை காவலில் வைத்துள்ளனர். மீனவர்களை முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஒரு சில பகுதிகளில் உள்ள கூரை வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளில் உரிமையாளர்களுக்கு தார்பாய்கள், சமையல் பாத்திரங்களை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் பயனாளிகளுக்கு வழங்கி பேரிடர் காலங்களில் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
புதுச்சேரி பத்துக்கண்ணு பகுதியில் புயலால் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர் வசந்த் ஈடுபட்டிருந்தார். அப்போது அறுவை மிஷின் எதிர்பாராத விதமாக கையில் பட்டு படுகாயம் அடைந்தார். இதேபோல் காலாப்பட்டில் வீரர் பெரியண்ணன் மரக்கட்டைகள் சரிந்து விழுந்தபோது அவர் கை மதில் சுவரில் சிக்கி படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளை தவிர மற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை (டிச.4) செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். நிவார முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்றார். ஷேர் செய்யவும்
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக புதுவை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை கடந்த 25ஆம் தேதி அறிவித்தது. தமிழக மற்றும் புதுவை கடலோர மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் எச்சரிக்கை ஏதும் நேற்று (டிச.2) விடுக்கப்படவில்லை. எனவே, புதுவை மீனவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லலாம் என புதுவை மீன்வளத் துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் கூறினார்.
வீடூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து நோணாங்குப்பம், ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது. அப்போது, கரையோரத்தில் உள்ள என்.ஆர்., நகரில், 140 குடும்பங்கள், குயிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. தகவலறிந்த, கமாண்டர் கோபிநாத் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்டு படையினர்,நேற்று வீடுகளில் சிக்கி இருந்த 120 பேரை, படகு மூலம் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
Sorry, no posts matched your criteria.