India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகூர் பள்ளிவாசல் சந்தனக்கூடு பெருவிழா இசை நிகழ்ச்சிக்கு வருகை தந்த இஸ்லாமிய பிரபல பாடகி டாக்டர் ரஹீமா காரைக்கால் வருகை தந்தார். அங்கு மஸ்தான் சாகிபு வலியுல்லாஹ் தர்காவில் ஜியாரத் செய்ய வருகை தந்த போது முன்னாள் அமைச்சர் நாஜிம் எம்எல்ஏ குரூப் பாசறை நண்பர்கள் பாடகி ரஹீமா அவர்களை வரவேற்று மரியாதை செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் கூனிச்சம்பட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க புதிய இயக்குனராக கூனிச்சம்பட்டு ராஜி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பரிந்துரையின் பேரில் கூட்டுறவுத்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அரசு ஆணையை உள்துறை அமைச்சர் இன்று ராஜிவிடம் வழங்கினர் அப்போது பாஜக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
புதுச்சேரி மாநிலம் முதலமைச்சர் ரங்கசாமியின் கூடுதல் தனிச்செயலர் தமிழ் அரிமா இரண்டு நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு நாளை காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவுத்துறையில் 38 இளநிலை ஆய்வாளர் பதவிக்கு 19 மையங்களில் இன்று எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் இத்தேர்வு எழுத 6,542 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 2,179 பேர் (33.31%) மட்டும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த நிலையில் 4,563 பேர் (66.69%) பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் வரும் 2025 ஜனவரி முதல் மீண்டும் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை போலீசார் கொண்டு வருகின்றனர். ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்த போக்குவரத்து போலீசார் இறங்கி உள்ளனர். அதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் இருக்கும் சூழலில், விதிகளை பின்பற்றி, வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை பிரிவு உள்ளது. இதில் சில மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை ஊழியர்களின் 15 எண்கள் கொண்ட சேவை புத்தகங்கள் மற்றும் சில கோப்புகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து அறிந்த அந்த பிரிவின் இளநிலை கணக்கு அலுவலர் கருணாகரன், ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.
புதுச்சேரி முதலியார் பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் அரசியலில் வர விருப்பம் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து உரிய நேரம் வரும்போது தெரிவிக்கப்படும். இப்போது எந்த கட்சியை சார்ந்தும் நான் வரவில்லை.பல ஆண்டுகளாக முதல்வரால் எதையும் செய்ய முடியவில்லை என்பதால் நான் வரவேண்டிய அவசியம் என்றார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதனுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.புதுச்சேரி ஆளும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர்.காங்கிரஸ், பாஜக அரசு மெஜாரிட்டி இழந்துள்ளது ஆறு எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படுவதால் முதலமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்
முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் கூறியதாவது, புதுச்சேரியில் அரசு தொடர்ந்து கலாச்சார சீரழிவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நடன நிகழ்ச்சியில் மது போதையில் நடனம் ஆடக்கூடிய ஒரு கேவலத்தை புதுச்சேரி மண்ணில் அரங்கேற்றியுள்ளதால், மீண்டும் அரசு கடற்கரை சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நடத்துவதற்கு ஆளுநர் தடை செய்ய வேண்டும். இது சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்த பூமி என்றார்.
அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது கனரக வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.