Pondicherry

News December 17, 2024

காரைக்கால் சேர்ந்த 18 மீனவர்கள் விடுதலை

image

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த 01-12-2024 அன்று பால்மணி என்பவருக்கு சொந்தமான விசைப்பலகில் 18 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றது. அப்பொழுது அவர்களை இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர்களை விடுதலை செய்து சொந்த ஊருக்கு வந்தனர்.

News December 17, 2024

கடலோர பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆலோசனை

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் மற்றும் கடலோர காவல் படை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

News December 17, 2024

அண்ணா திடலில் முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு

image

புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் அண்ணா திடலில் ரூ.9.6 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் மற்றும் திடலைச் சுற்றி நகராட்சி கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை முதலமைச்சர் ரங்கசாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து விளையாட்டு அரங்கத்தையும் கடைகளையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News December 17, 2024

ரூ.15 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் 

image

காரைக்கால் GHல் ஜிப்மர் மருத்துவர்களால் துவங்கப்பட்டுள்ள எலும்புமுறிவு மருத்துவமனைக்கு பாஜக செயற்குழு உறுப்பினர் மற்றும் CGM, ரவிச்சந்திரன் முயற்சியால் ONGC மூலம் ரூபாய் 15 லட்சம் மதிப்பில் பல மருத்துவ உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இது காரை ஏழை மக்களின் இலவச சிகிச்சைக்காக மிகவும் பயனுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News December 17, 2024

ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் 

image

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நேற்று ஹெல்மெட் குறித்து வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் திரிபாதி ஜனவரி 1 முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அன்று முதல் ஹெல்மெட் அணியவில்லை என்றால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

News December 16, 2024

நிவாரணம் ரூ.5000 வரவு – அமைச்சர் அறிவிப்பு

image

புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி அரசு அறிவித்த பெஞ்சல் புயல் நிவாரணம் ரூ.5,000, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடி பரிமாற்ற முறை மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் அனைவரும் https://pdsswo.py.gov.in/helpdesk/  வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

News December 16, 2024

அரசு பள்ளி வைர விழா – முதல்வருக்கு அழைப்பு

image

காரைக்கால் மாவட்டம் தேனூர் அரசு மேனிலைப்பள்ளி வைரவிழா வரும் 22ஆம் தேதி  பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி கலந்து கொள்கிறார். இன்று பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வைர விழாவிற்கான பத்திரிகயை முதல்வரிடம் வழங்கினர்.  உடன் பள்ளியின் விரியுரையாளரும்,வைர விழாவின் பொருளாளர் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News December 16, 2024

காரைக்கால்: பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பொதுமக்கள் முகாம்’ நடைபெற்றது. இதில், 132 மனுக்கள்பெறப்பட்டன. மனுக்களை பெறும்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்ட மாவட்ட ஆட்சியர், அனைத்து மனுக்கள் மீதும் குறித்த நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.

News December 16, 2024

கோப்புகள் திருட்டு – வவுச்சர் பெண் ஊழியர் கைது

image

புதுச்சேரி லெபர்தனே வீதியில், பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 15 ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் மற்றும் 3 கோப்புகள் மாயமானது. புகார்படி ஒதியஞ்சாலை
போலீசார் வழக்குப் பதிவு செய்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதே அலுவலகத்தில் வவுச்சர் ஊழியராக பணியாற்றும் கண்மணி என்பவர் சர்வீஸ் புத்தகங்களை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News December 16, 2024

ஆறு மாத கணினி பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

image

புதுவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் ராகினி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், வில்லியனூர் மற்றும் கிருமம்பாக்கத்தில் உள்ள கணினி மையங்களில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் தேசிய திறந்த வெளிபள்ளி நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் பல்வேறு வகையான 6 மாத தொழிற்சார்ந்த கணினி வகுப்புகள் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க 31ஆம் தேதி கடைசி நாள் என்றார்.

error: Content is protected !!