India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் தற்பொழுது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதனை போக்குவரத்து கூடுதல் செயலாளர் அறிவித்துள்ளார்.புதுச்சேரி நகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 இருந்து ரூ.7 அதிகரிப்பு.ஏசி வசதி கூடிய பேருந்துகளில் கட்டணம் ரூ.10 இருந்து ரூ.13 அதிகரிப்பு. ஏசி வசதி இல்லாத பேருந்துகளில் கட்டணம் ரூ.13 இருந்து ரூ.17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவாக 13 எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர் மற்றவர்கள் வெளியே உள்ளனர்.என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுவிட்டது. இந்த மைனாரிட்டி அரசு, எத்தருணத்திலும் கவிழும் நிலை உருவாகியுள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை, கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் நேற்று வெளியிட்டுள்ளார். ஏ.சி., வசதி இல்லாத டவுன் பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.7 ஆகவும், அதிகப்பட்ச கட்டணம் ரூ.13இல் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “புதுச்சேரி நகராட்சியின் அனுமதியின்றி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. நகராட்சியின் முன் அனுமதி பெறப்பட வேண்டும். நுழைவுக் கட்டணம் தவிர்த்து மறைமுகமாக உணவு, மதுபானம் என்ற பெயரில் வசூலித்தாலும் விதிப்படி வரி செலுத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் நாடாளுமன்றத்தில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இழிவுபடுத்திப் பேசியுள்ளார். இதனை கண்டித்து நாளை (டிச.20) அண்ணா சிலை அருகே கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
காரைக்காலில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள், ஸ்கேன் மையங்கள் மற்றும் மாலை நேரம் தனியார் மருத்துவ சேவை மையங்கள் உடனடியாக தங்களது மருத்துவ மையத்தை மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் காரைக்கால் நலவழித்துறை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்படும் என்று காரைக்கால் நலவழித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சபாநாயகர் பதவியின் புனித தன்மையை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாலும், அரசியலமைப்பு சட்டத்தை மீறி அரசியல் சாயத்துடன் செயல்பட்டு வருவதால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என புதுச்சேரியின் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு இன்று சட்டமன்ற செயலரை சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளை முதல் மீண்டும் விமான சேவை துவங்கப்பட உள்ளது. அதன்படி தினசரி காலை, 11:10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம், 12:25 மணிக்கு, புதுச்சேரியை வந்தடையும்.மதியம் 12:45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் மதியம், 2:30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். ஐதராபாத்தில் இருந்து மாலை 3:05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4:50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.
சென்டாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரியில் உள்ள இன்ஜினியரிங் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் நடைபெறுகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், சென்டாக் கலந்தாய்வு மூலம் இடம் பெற்று கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
புதுச்சேரியில் பிடிபட்ட கஞ்சா குற்றவாளி இடம் விசாரித்ததில் அதில், அவருக்கு திருச்சி ராம்ஜி நகர் ரமேஷ் (எ) விசுவநாதன் கஞ்சா சப்ளை செய்தது தெரிய வந்தது. நேற்று திண்டிவனம் வந்த விஸ்வநாதனை, ஒதியஞ்சாலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் ஒடிசாவில் இருந்து வாங்கி வந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விஸ்வநாதனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.