Pondicherry

News December 22, 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி

image

உருளையன்பேட்டையைச் சோ்ந்த காா்த்திகேயன், தனியாா் வேலைவாய்ப்பு ஆலோசனை மையத்தை நாடி, அரசு வேலைக்கு முயற்சித்தாா். அங்கிருந்தவா்கள் ரூ.20 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிய நிலையில், அவர்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.20 லட்சத்தை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் வேலை வாங்கித் தரவில்லை. இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

News December 21, 2024

ராட்சத அலையில் சிக்கி இளைஞர் மாயம்

image

ஆந்திராவை சேர்ந்த 6 கல்லூரி மாணவர்கள் புதுச்சேரிக்கு இன்று சுற்றுலா வந்தனர். அப்போது தலைமை செயலகம் எதிரே உள்ள கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது வினித் ரெட்டி என்ற மாணவர் ராட்சத அலையில் சிக்கி திடீரென மாயமானார். சக மாணவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனை படகுகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News December 21, 2024

சபாநாயகருக்கு எதிராக மேலும் ஒரு சுயேட்சை எம்எல்ஏ

image

புதுச்சேரி சட்டமன்ற பேரவைத்தலைவர் ஆர்.செல்வத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரக் கோரி சுயேட்சை எம்எல்ஏ நேரு ஏற்கனவே பேரவைச் செயலரிடம் மனு அளித்திருந்தார். இந்நிலையில், பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளனும் தற்போது சட்ட பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரி பேரவைச் செயலரிடம் தற்போது மனு அளித்துள்ளது  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஏற்படுத்தியுள்ளது.

News December 21, 2024

புதுவை: பணத்தை தவறவிட்ட இடைத்தரகர்

image

வைஷால் வீதியில் வங்கியின் ஏடிஎம் வாசலில் ரவிசந்திரன் (52) ரியல் எஸ்டேட் இடைத்தரகர் அவரது ரூ. 20 ஆயிரம் ரொக்க பணத்தை தவறவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பெரும்பாலான காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி பணத்தை கண்டுபிடித்து ரவிச்சந்திரனிடம் போலீசார் இன்று ஒப்படைத்தனர்.

News December 21, 2024

பாகூரில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

image

புதுவை பாகூர் கிராமங்களை நோக்கி என்ற தலைப்பிலான ‘மக்கள் குறை தீர்ப்பு முகாம்’ நாளை கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு பள்ளியில் நடக்கிறது. இந்த முகாமில், புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதாரில் திருத்தம் உள்ளிட்ட சேவைகள் நடக்கிறது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று, தங்களின் துறை சார்ந்த மனுக்களை, மக்களிடமிருந்து பெற்றும், குறைகளை கேட்டறிந்து தீர்க்க உள்ளனர்.

News December 21, 2024

புதுவை பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகள் அனுமதி

image

புதுவையில் சில நாட்களுக்கு முன்பு நீடூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் படகு குழாமில் நிறுத்தி வைத்திருந்த 5 படகுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பாரடைஸ் பீச்சில் இருந்த ஜெட்டி, குடில்கள், கீற்று குடைகள் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில், தற்போது ஜெட்டி உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டது. அதனை அடுத்து, 20 நாட்களுக்கு பின், நேற்று முதல் பாரடைஸ் பீச்சில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

News December 20, 2024

பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலிக்க எம்எல்ஏ கோரிக்கை

image

புதுச்சேரி திமுக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்எல்ஏ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்து கட்டணத்தை குறைந்த பட்சம் ரூ.2 ரூபாயிலிருந்து ரூ.8 ரூபாய் வரை அதிகரித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ஏழை,எளிய மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவே பொதுமக்களின் நலன் கருதி, பேருந்து கட்டண உயர்வை அரசு மறுபரிசீலிக்க வேண்டும்” என்றார்.

News December 20, 2024

புதுவையில் நாளை குறை தீர்ப்பு முகாம்

image

புதுச்சேரி இணையவழி காவல் துறையினர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை (டிச.21) காலை 11 மணி முதல் 1 மணி வரை குறை தீர்ப்பு கூட்டம் இணையவழி குற்ற பிரிவு காவல் நிலையத்தில் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இணையவழி குற்றம் சம்பந்தமாக சந்தேகம், குறை இருந்தால் மற்றும் பாதிக்கப்பட்டிருந்தால் தெரியப்படுத்தலாம். மேலும் அதற்கு உண்டான தீர்வு காணப்படும்.என்று தெரிவித்தனர்.

News December 20, 2024

விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

image

காரைக்காலில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பயிர் செய்யப்பட்ட நெல் பயிருக்கு நிவாரணம் வழங்க புதுவை அரசு உத்தேசித்துள்ள நிலையில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் தரவுகள் கணக்கெடுக்கப்பட்டு விண்ணப்ப படிவங்கள் உழவர் உதவியகங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அதனை விவசாயிகள் பெற்று சரிபார்த்து வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 20, 2024

புதுச்சேரியில் பேருந்து கட்டணம் உயர்வு

image

புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் தற்பொழுது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதனை போக்குவரத்து கூடுதல் செயலாளர் அறிவித்துள்ளார்.புதுச்சேரி நகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 இருந்து ரூ.7 அதிகரிப்பு.ஏசி வசதி கூடிய பேருந்துகளில் கட்டணம் ரூ.10 இருந்து ரூ.13 அதிகரிப்பு. ஏசி வசதி இல்லாத பேருந்துகளில் கட்டணம் ரூ.13 இருந்து ரூ.17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!