Pondicherry

News December 29, 2024

தலைமறைவானவருக்கு கோர்ட் பிடிவாரண்டு

image

புதுச்சேரி கனக செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நாகப்பன் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார் அதனை தொடர்ந்து புதுவை முதன்மை உதவி கோர்ட் அமர்வு கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நேற்று உத்தரவிட்டது.

News December 29, 2024

புதுவை: தனியார் பஸ் மோதி இளைஞர் பலி

image

புதுவை பூமியான்பேட்டை, பாவாணர் நகர் கணேஷ் மகன் தினேஷ். இவர் அதே பகுதி கிறிஸ்டோபர் என்பவருடன் நேற்று காலை கடலுாருக்கு சென்று திரும்பிய போது ஸ்பிளெண்டர் பைக் மீது தனியார் பஸ் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தினேஷ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிறிஸ்டோபர் பலத்த காயம் அடைந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 29, 2024

வில்லியனூரில் ஓட்டுநருக்கு கத்திக்குத்து

image

விழுப்புரத்தை சேர்ந்தவர் ராஜா. ஓட்டுநரான இவர் அரசூர் சாராயக்கடையில் சாராயம் குடித்து கொண்டிருந்தார். அங்கு வந்த வில்லியனுார் கோபாலன் கடையைச் சேர்ந்த மைக்கேல், அய்யப்பன் ராஜாவிடம் தீப்பெட்டி கேட்டு பின் தீப்பெட்டியை ராஜவிடம் கொடுக்கவில்லை திருப்பிகேட்ட ராஜாவை அவர்கள் கத்தியால் தலை, கை, காலில் வெட்டி விட்டு தப்பியோடினர். வில்லியனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

News December 28, 2024

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அரசு அறிவிப்பு

image

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை உயர்த்த கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி பெட்ரோல் வரி 2.44 சதவீதமும், டீசல் 2.57 சதவீதமும் உயர்கிறது. இந்த உயர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிரதேசங்களிலும் அமலாகிறது. ஜனவரி 1 முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

News December 28, 2024

கல்வித்துறையில் பணியாற்றும் பால சேவிகாக்கள் இடமாற்றம்

image

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், காரைக்காலில் செயல்படும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பால சேவிகாக்கள் 7 பேர் புதுச்சேரி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஏழு பால சேவிகாக்காள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

News December 28, 2024

புதுவை சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை

image

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆன்லைனில் தங்கும் விடுதிகளை தேடும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து, மோசடி கும்பல் ஓட்டல்களின் போலியான இணையதளத்தை உருவாக்கி பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்யும் முன் ஓட்டல் இணையதளத்தின் உண்மை தன்மையை கண்டறிந்து முன் பணம் செலுத்த வேண்டும் என புதுவை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

News December 28, 2024

புதுச்சேரியில் நாளை ஆராய்ச்சி, தீயணைப்புத் துறை தோ்வுகள்

image

புதுவை அரசுப் பணியாளர் மற்றும் நிா்வாக சீா்த்திருத்தத் துறை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதுவை திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் 10 மையங்களில் நாளை  நடைபெறவுள்ளது. தீயணைப்புத் துறையில் நிலைய அதிகாரி பணியிடத்துக்கான தேர்வு 2 மையங்களில் நடைபெற உள்ளது.

News December 28, 2024

கோடிக்கணக்கில் மோசடி செய்த 3 பேர் கைது

image

மும்பை போலீஸ் பேசுகிறோம் போதை கடத்தலில் உங்களுடைய மொபைல் மற்றும் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம் என்று புதுச்சேரி உட்பட இந்தியா முழுவதும் பல ஆயிரம் நபர்களை மிரட்டி ரூ.66.11 கோடி ரூபாய் பணத்தை பொதுமக்களிடமிருந்து கொள்ளையடித்த கொல்கத்தாவை சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் மூன்று நபர்களை இன்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

News December 27, 2024

முன்னாள் பிரதமர் மறைவு: புதுச்சேரி முதல்வர் அஞ்சலி

image

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் திடீர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். தொடர்ந்து தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று புதுச்சேரி மாநில மாகேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவப்படத்திற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

News December 27, 2024

புதுச்சேரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

image

புதுச்சேரி துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுகா கன்சல்டண்சி சேவை மையம் சார்பில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை (டிச.28) ரெட்டியார் பாளையத்தில் நடைபெற உள்ளது. முகாமில், 9 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

error: Content is protected !!