Perambalur

News May 2, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூருக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

News May 1, 2024

குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு

image

பெரம்பலூர், ஆலத்தூர் ஒன்றியம் T.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன்(45). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்து இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

News May 1, 2024

வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பணி

image

பெரம்பலூர், குரும்பலூர் கிராமத்தில் (ஏப்.30) நேற்று திட்டக்குடி JSA வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் குழுவாக ஊரக வேளாண்மை பயிற்சியின் ஓர் பகுதியாக நெற்பயிருக்கு ஊட்டச்சத்து கரைசல் எவ்வாறு தயார் செய்து பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளுடன் வயல்களில் செயல்முறை செய்து பயிற்சி மேற்கொண்டு களப்பணி செய்தனர்.

News May 1, 2024

பெரம்பலூர்: தீப்பிடித்து எரிந்த வீடு; நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் நேற்று(ஏப்.30)  முத்துச்சாமி-தங்கநிலவு தம்பதியின் குடிசைவீடு தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்தது. இதனை அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், தம்பதியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர், து.செயலாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.

News April 30, 2024

மாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா

image

பெரம்பலூர் மாவட்டம் எசனை காட்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 30) காலை 10 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பார்ப்பாங்கரை , அனுக்கூர், அன்னமங்கலம் ,கோனேரி பாளையம், வேப்பந்தட்டை ஆகிய கிராமங்களில் இருந்து திரளாக கலந்து கொண்டு அக்னி சட்டி (ம) சாமி ஊர்வலம் செய்து தரிசனம் செய்து ஊர் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

News April 30, 2024

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

image

2024-2025 ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையம் (ம) சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதால் தகுதியுடைய மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தேர்வு மே 10, 11ம் தேதிகளில் பெரம்பலூரில் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. விடுதியில் மாணவர்கள் சேர்வதற்கு மே 8ம் தேதி வரை www.sdat.tn.gov.in விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

பெரம்பலூர்: விருது பெற விண்ணப்பிக்கலாம்!

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இதற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in தளத்தில் மே 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

பெரம்பலூர் அருகே தோராட்டம்!

image

பெரம்பலூர் எசனை ஸ்ரீகாட்டு மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்றது. இதில் அக்னி சட்டி மற்றும் அழகு குத்துதல் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும், இன்று(30ஆம் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மன் அருள் பெற்று எசனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மக்கள் முடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

News April 29, 2024

இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

image

தமிழகக் கட்டிட அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் பெரம்பலூர் வட்டம், சத்திரமனை கிராமத்தில் இன்று
இலவச சட்ட விழிப்புனர்வு முகாம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரசு மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர் குறித்து எடுத்துரைத்து பேசினார்.
இதில் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 29, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் வெயில்

image

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களுக்கு 4 நாட்கள் அதிகமாக வெப்பம் தாக்கக் கூடும் என்பதால் மஞ்சள் அலார்ட் விடுத்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உச்சி வெயில் நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.