India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் தமிழ்ச்சங்கத்தினர், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி, பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் திருவள்ளுவர் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்திற்கும் மனு கொடுக்கப்பட்டுத்துள்ளனர்.
பெரம்பலூர் மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவின் பகல் பத்து நிகழ்ச்சியின் 2ஆம் நாளான இன்று பெருமாள், பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி, திருக்கோவில் மங்கள வாத்தியம் முழங்க மூன்று முறை கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு சேவை செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், முன்னாள் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடியில் அமைந்துள்ள அணையானது கடந்த மாதம் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக ஆங்கில புத்தாண்டான இன்று விடுமுறை என்பதால் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் சிறுவர்கள் இளைஞர்கள் வாய்க்காலில் வரும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள், கருத்தரங்கம், கவியரங்கம் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வள்ளுவரின் சிலை இருப்பதை உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று (டிச.30) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. வான்புகழ் கொண்ட வள்ளுவனின் புகழ் பரவட்டும், புத்தொளி பிறக்கட்டும்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது யாரேனும் சாலையில் 2 அல்லது 4 சக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, வேகமாக பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் நடுவே நின்று கேக் வெட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள், சலுகைகள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (30.12.2024) நடைபெற்றது. ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் , மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பெரம்பலூர் மங்களமேடு அருகே உள்ள அத்தியூரைச் சேர்ந்த முகமது இப்ராஹிம்(22), ஆடுதுறை கிராமத்தைச் சேர்ந்த சூர்யா(26), கீழக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரகுமான்(28), ஆகியோரை கைது செய்து 18 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News செயலியில் பெரம்பலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்தியாளராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் <
பெரம்பலூர் நகரிலுள்ள பெரிய தெற்குத் தெருவைச் சேர்ந்த பாரதி (33) என்பவர் நேற்று (டிச.29) அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், நிகழ்விடத்திற்குச் சென்று பார்வையிட்டு, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்
பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று (டிச.29) இரவு குளிரால் தவித்த ஆதரவற்ற சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை அளிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் லயன்ஸ் கிளப் தலைவர் சண்முகதேவன், செயலாளர் டாக்டர் சதீஷ், பொருளாளர் தேவா, முன்னாள் பொருளாளர் வினயா பாலகிருஷ்ணன், உறுப்பினர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் வழங்கினார்கள்.
Sorry, no posts matched your criteria.