Perambalur

News January 7, 2025

பெரம்பலூர்: பெண் வாக்காளர்களே அதிகம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் உள்ள 5,86,073 வாக்காளர்களில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். அதன்படி, பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 9,056 பெண் வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 3,805 பெண் வாக்காளர்களும் என 2 தொகுதியிலும் உள்ள ஆண் வாக்காளர்களை விட அதிகமாக உள்ளனர். ஷேர் பண்ணுங்க.

News January 7, 2025

பெரம்பலூர்: இறுதி பட்டியலில் 5.86 லட்சம் வாக்காளர்கள்

image

பெரம்பலூர் (தனி) தொகுதியில் 1,49,106 ஆண் வாக்காளர்களும், 1,58,162 பெண் வாக்காளர்களும், 28 இதர வாக்காளர்களும் சேர்த்து 3,07,296 வாக்காளர்கள் உள்ளனர். குன்னம் தொகுதியில் 1,37,485 ஆண் வாக்காளர்களும், 1,41,290 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும் சேர்த்து 2,78,777 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 5,86,073 வாக்காளர்கள் உள்ளனர்.

News January 6, 2025

பெரம்பலூர் : ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேசிய கீதத்தையும்,தமிழக மக்களையும் அவமதிப்பு செய்யும் வகையில் வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி யைக் கண்டித்து
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை(07.01.2025) காலை 10.00மணியளவில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்

News January 6, 2025

பெரம்பலூரில் 3-லட்சத்திற்கும் மேல் வாக்காளர்கள்

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான, கிரேஸ் பச்சாவ் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (06.01.2025) வெளியிட்டார். இதன்படி 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளில் மொத்தம் 3,07,296 வாக்காளர்கள் உள்ளனர்.

News January 6, 2025

பெரம்பலூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் (Final Electoral Roll) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜன.06) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

News January 6, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் இத்தனை சிறப்புகளா

image

‘பெரும்புலியூர்’ என்று அழைக்கப்படும் பெரம்பலூர் மாவட்டம் புலி, சிறுத்தை, கரடி வாழ்ந்த வனப்பகுதியாக காணப்பட்ட இடமாகும். அதுமட்டுமின்றி ரஞ்சன்குடி கோட்டை, சாத்தனூர் கல்மரம், மயிலூற்று அருவி, சோழகங்கம் ஏரி என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களும் இங்கு அமைந்துள்ளன. மேலும் ‘லாடபுரம்’ என்ற பகுதியில் பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்றும் இருப்பதாக கூறப்படுகிறது.

News January 6, 2025

பெரம்பலூரில் கடும் பனிப்பொழிவு

image

ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலம் என்பதால் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கத்தைவிட குளிரும், பனியும் அதிகமாக நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக மாலை நேரத்திலேயே குளிர் தொடங்கி, காலை சூரியன் உதித்தும் பனி மூட்டமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களும் வீட்டினுள் முடங்கியுள்ளனர். மேலும், பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.

News January 5, 2025

பெரம்பலூரில் சரிந்த மக்கள் தொகை

image

தமிழ்நாடு புவியியல் துறை 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி மக்கள்தொகை குறைவாக உள்ள மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட மக்கள்தொகை 6 லட்சமாக குறைந்து, முதல் இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 5, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெரம்பலூர் மகிளா கோர்ட் அதிரடி

image

பெரம்பலூரில் கடந்த 2020-ஆம் ஆண்டு, சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அரும்பாவூரை சேர்ந்த தன்ராஜ் (37), அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் தீபா (42) ஆகியோர் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தன்ராஜிற்கு 6 வருடம், உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் தீபாவிற்கு 5 வருட கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

News January 4, 2025

ஆண்களுக்கு செல்போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆண்களுக்கான செல்போன் பழுது நீக்குதல் இலவச பயிற்சி குறித்து ஜன.20 ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி(IOB) வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனரிடம் 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!