Perambalur

News May 11, 2024

பெரம்பலூர்: ஜூலை 2-ல் துணைத் தேர்வு?

image

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று(மே 10) வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று(மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

திடீர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட தேனூர், விராலிப்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை- 4 மணியளவில் திடீரென்று காற்றுடன் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .அண்மைகாலமாக 100-டிகிரிக்கும் அதிகமாக வெயில் சுட்டெரித்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

பெரம்பலூரில் மழைக்கு வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

செங்குணம் அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி 

image

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 94.77 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதில் பெரம்பலூர் வட்டம், செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்கள் அஜய், ராகுல், சந்தியா, மோகித பிரியன் ஆகியோர் கணித பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

பெரம்பலூர் 9ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.73% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.62 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.44 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 9ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

10th RESULT: பெரம்பலூரில் 94.77% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 94.77% தேர்ச்சி விகிதம் பதிவா மாநில அளவில் 8வது இடம் பிடித்துள்ளது. இதில் மாணவர்கள் 92.91% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.01% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

பெரம்பலூர்: மாணவர்களை பாராட்டிய வேந்தர்!

image

பெரம்பலூர் சீனிவாசா செவிலியர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் திருச்சி SRM பல்கலைக்கழகத்தில் மே 7 அன்று நடைபெற்ற உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளான கேரம் போர்டு, கால் பந்து ஆகிய போட்டிகளில் முதல் மற்றும் 2ம் பரிசு வென்றனர். அந்த மாணவர்களை நேற்று(மே 9) தனலட்சுமி சீனிவாச பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பாராட்டி பரிசு வழங்கினார்.

News May 9, 2024

பெரம்பலூர் : அதிமுக கிளைச் செயலாளர் பலி

image

பெரம்பலூர், வேலூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் சுப்பிரமணி திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவிழாவின் போது அதே பகுதியைச் சேர்ந்த திமுக கிளை செயலாளர் செந்தில்குமார் தரப்பிற்கும் இவர் தரப்பிற்கும் ஏற்பட்ட மோதலில் சுப்பிரமணி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

பெரம்பலூர்: 10ம் வகுப்பு சான்றிதழ் பெற அறிவுறுத்தல்..!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் செப். 2015 – செப். 2021 வரை 10ம் வகுப்பு தேர்வு எழுதிய தனி தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள ஆக.31ம் தேதி கடைசி தேதி ஆகும். எனவே சான்றிதழ் பெறாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் பெரம்பலூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ரூ.45 தபால் வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட தபால் மூலமாக பெற்று கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

வேப்பந்தட்டை அருகே அன்னக்கொடி திருவிழா

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெண்பாவூர் கிராமத்தில் நேற்று(மே 8), சித்திரை மாதங்களில் 70 வருடங்களுக்கு மேல் விமர்சையாக கொண்டாடப்படும் அன்னக்கொடி திருவிழா மற்றும் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில், குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கு படையலிட்டு அன்னம் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.