India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தவேண்டிய வரி, வாடகை, கட்டணம் ஆகியவற்றை செலுத்த நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையர் ராமர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூர் நகராட்சியில் செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், மற்றும் கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக பொதுமக்கள் நகராட்சியில் வரி செலுத்த அறிவுறுத்தல்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சடையன். கடந்த 2021 எசனை அருகே நிறுத்தி வைத்திருந்த தனது டிராக்டரை காணவில்லை என காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.1 லட்சம் பெற்றுள்ளார். விசாரணையில், டிராக்டரை காணவில்லை என பொய் புகாா் அளித்து, காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றி ரூ.1 லட்சம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது, அவருக்கு 3 ஆண்டுகள் சிறையும், ரூ.5000 அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீா்ப்பளித்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் போலி மருந்தகம் கடை வைத்து சிகிச்சை தருவதாக கிடைத்த தகவலின் பெயரில் பெரம்பலூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், அரசு மருத்துவர் அன்பரசு, சித்த மருத்துவர் விஜயன், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் குழுவினர் அதிரடி சோதனை நடத்தியபோது துறைமங்கலம் பகுதியில் போலி மருத்துவர் இளையராஜா கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாநகரில் நாளை (ஜன.31) முதல் 9வது புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. புத்தக ஆர்வலர்களுக்கு விருந்தாக அமைய உள்ள புத்தக கண்காட்சியில் பல்வேறு இலக்கிய ஆளுமைகளும், இலக்கிய ஆர்வலர்களும், பட்டிமன்ற பேச்சாளர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளனர். பெரம்பலூரின் கல்வி நிறுவனங்களும் இதில் பங்கு பெற்று கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளன.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் பெரியார் நகரைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (52) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று முன்தினம் (ஜன.28) இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எண்ணம் தோன்றினால் ஆலோசனை பெற மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104-ஐ அழைக்கவும்.
பெரம்பலூரில் இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர் செல்வக்குமார், இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணனுக்கு சிறந்த கவுன்சிலர் விருது வழங்கினார். கவிப்பிரியா, தக்சா, ஸ்ரீராம், சூர்யா சிறந்த ஜூனியர்களுக்கான சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். செயலாளர் இராதாகிருஷ்ணன், மாவட்டக் கன்வீனர் ஜோதிவேல், பாராட்டு தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி இருவார முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும் உட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை மறுநாள் (ஜன.31) காலை 11 மணிக்கு ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெறவுள்ள விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இதில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் 9ஆம் ஆண்டு புத்தக திருவிழா 31.01.2025 அன்று தொடங்கி 09.02.2025 வரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் புத்தக வாசிப்பை அதிகப்படுத்த புத்தகத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் 2025 ஆம் ஆண்டுக்கான புத்தகத் திருவிழா பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் தயாராகி வருகிறது.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.01.2025 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், இடுபொருட்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். இதில் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.