Perambalur

News November 17, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை, வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மறுநாளும், குரும்பலூர், லாடபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளான அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், குரூர் ஆகிய பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தகவல் அளித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 16, 2024

பெரம்பலூர்: 29 கிலோ குட்கா பொருள் சிக்கியது

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர் கிராமத்தில் சுப்பிரமணியன் மகன் சக்திவேல் என்பவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 29 கிலோ கொண்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்பனை செய்த நிலையில் தனிப்படையினர் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார், ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் அதிரடியாக சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்து சக்திவேல் என்பவரை கைது செய்தனர்.

News November 16, 2024

பெரம்பலூர் : 94 பயனாளிகளுக்கு ரூ.3.05 கோடி  கடன் உதவி

image

பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட 71வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 94 பயனாளிகளுக்கு டாம்கோ கடன், பயிர்கடன், விவசாய நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கடன் என ரூ.3.05 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று வழங்கினார்.

News November 16, 2024

ஆலத்தூர் அருகே விபத்து: 20 பேர் படுகாயம்

image

பண்ருட்டியைச் சேர்ந்த 25 பேர் திருச்செந்தூர் நோக்கி வேனில் பயணம் செய்துள்ளனர். இன்று அதிகாலை 4:30 மணியளவில் பெரம்பலூரை அடுத்த ஆலத்தூர் என்ற இடத்தில் வேன் முன் சென்ற லாரி மீது எதிர்பாரத விதமாக மோதியதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 5 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 16, 2024

நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்

image

அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.70.69 கோடி செலவில் 456 முடிவுற்ற பணிகளை நேற்று திறந்து வைத்து, ரூ.80.60 கோடி மதிப்பீட்டில் 27 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.103.22 கோடி மதிப்பீட்டில் 11,721 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதுகுறித்த உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.

News November 15, 2024

பெரம்பலுருக்கான திட்டங்கள் – முதலமைச்சர் அறிவிப்பு

image

முதல்வராக பொறுப்பேற்ற பின் மகளிருக்கான கட்டணமில்லா திட்டத்திற்கு தான் முதல் கையெழுத்திட்டேன். பெரம்பலூரில் 456 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துள்ளேன். 27 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். பெரம்பலூர் மாவட்டம் மருதையாற்றின் குறுக்கே ரூ.24 கோடியில் பாலம் அமைக்கப்படும். அரசு மாதிரி பள்ளிகளுக்கு ரூ.56 கோடியில் புதிய வகுப்பறை விடுதி கட்டடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

News November 15, 2024

குன்னம் அருகே 10க்கும் மேற்பட்டோர் காயம்

image

குன்னம் வட்டம், கல்லமபுதூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது புளிய மரத்தில் இருந்த கதண்டு வண்டுகள் கடித்து 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News November 15, 2024

மதுபான கடையில் தகராறு செய்தவர் கைது

image

ஆலத்தூர் வட்டம் காரை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் காரை கிராமத்தில் உள்ள மதுபான கடையில் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக மதுபான கடையில் பணியாளர்கள் பாடலூர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து, வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News November 15, 2024

பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.1000

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 14 ஆம் தேதி ஊரக திறனறித் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு நவம்பர் 20 ஆம் தேதிக்குள் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் இருக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும், மாணவர்களே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

News November 14, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.11.2024 அன்று மாலை 4:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக வழங்கி பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!