India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடர் கனமழை காரணமாக து.களத்தூர் வழி தேனூர் கிராமம் தொட்டியப்பட்டி செல்லும் வழியில் ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. தரைப்பாலம் மூழ்கியதால், போக்குவரத்து தடைப்பட்டது. மக்களும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. எனவே, இப்பகுதியில் பாலம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேனூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மு.ப்ரீத்தி 2024 அக்டோபர் மாதம் நடைபெற்ற தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில், மாநில அளவில் 91 மதிப்பெண்கள் பெற்று 750 பேரில் 151வது இடம் பிடித்து தேர்வாகியுள்ளார். அவருக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பெரம்பலூர் அடுத்த எறையூர் கிராமத்தில் உள்ள குழந்தைகள் தத்தெடுப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிறுவனத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் குழந்தைகளை அனைவரையும் கொஞ்சி மகிழ்ந்தார்.
தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தனியார் பள்ளியில் மூன்று பேரும், அரசுப் பள்ளியில் ஆறு பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (21.12.2024) காலை 6.30 மணி நிலவரப்படி 107 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பெரம்பலூர் 12 மி.மீ, எறையூர் 11 மி.மீ, கிருஷ்ணாபுரம் 6 மி.மீ, தழுதாழை 23 மி.மீ, வேப்பந்தட்டை 6 மி.மீ, பாடலூர் 29 மி.மீ, செட்டிகுளம் 20 மி.மீ மொத்தமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 107 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
பெரம்பலூா் அருகே உள்ள முத்து மாரியம்மன் கோயில், கருமாரியம்மன் கோயில், புதுவேலூா் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில், பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள அவினாசி அம்மன் கோயில் உள்ளிட்ட 4 கோயில்களின் பூட்டை உடைத்து, மொத்தம் ரூ. 1.20 லட்சம் பணம், 6 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது நேற்று தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பெரம்பலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா இன்று (20.12.2024) -ம் தேதி பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்டும், பதிவேடுகளை சரிபார்த்தும் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாடாலூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு காவலர் பணிகளை மேம்படுத்தும் சில அறிகுறிகளை வழங்கினார்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் தலைமை தேர்தல் அலுவலர் / அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில், ஹெல்ப்லைன் என்னான 1950 என்ற வடிவில் 2,000 கல்லூரி மாணவ, மாணவிகள் நின்று இளம் வாக்காளர் சேர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கிடங்கினை, காலாண்டு ஆய்வுக்காக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் / அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சிகூர், கடூர், நாமங்குனம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (டிச.20) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.