Perambalur

News September 18, 2025

பெரம்பலூர்: மாவட்ட நிர்வாகம் இளைஞர்களுக்கு அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற (20.09.2025) அன்று பெரம்பலூரில் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்யவுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Loginல் தங்களது விவரங்கள் பதிவு செய்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 17, 2025

பெரம்பலூர்: சொந்த தொழில் தொடங்க கடன் உதவி!

image

பெரம்பலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதனை LIKE ஸ்செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் தொழிலதிபர் ஆகுங்க!

News September 17, 2025

பெரம்பலூர்: உங்க நகை சீட் பாதுகாப்பா இருக்கா?

image

பெரம்பலூர் மக்களே, நீங்க சிறுக சிறுக சேமித்த பணத்தை வருங்கால புன்கைக்காக நகை போடுறோம்.. எனவே நகை சீட் போடும் போது இதல்லாம் கவனியுங்க.
1.அரசு அங்கீகார நிறுவனம்
2. மாதாந்திர தொகை
3. தள்ளுபடி, செய்கூலிகள்
4.பணத்தை திரும்பபெறுதல்
5.ஆவணக்கட்டணம் மற்றும் ரசீதுகள்,
ஏற்கனவே நகை சீட்ல உள்ளவங்களும் இதல்லாம் சரிபாருங்க! தகவல்களுக்கு: 1800-11-4000 (அ) 14404 அழையுங்க.. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE…

News September 17, 2025

பெரம்பலூர்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

image

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பெரம்பலூர் எம்.பி அருண் நேரு பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, எம்.எல்.ஏ பிரபாகரன் மாவட்ட எஸ்.பி ஆதார்ஷ் பசேரா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

பெரம்பலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

பெரம்பலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <>இணையத்தளத்தில் <<>>இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News September 17, 2025

பெரம்பலூர்: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

பெரம்பலூர் மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க.<> Click Here<<>>
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

பெரம்பலூர் மக்களே மிஸ் பண்ணாதீங்க!

image

பெரம்பலூர் மக்களே நமது மாவட்டத்தில் இன்றும் 17.09.2025 மற்றும் நாளை 18.09.2025 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொள்ளவோம்!
இன்று( 17.09.2025)
✅பெரம்பலூர்
⏩சமுதாயகூடம், புதுநடுவலூர்,
✅வேப்பூர்
⏩அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்பெரம்பலூர்,

நாளை( 18.09.2025)
✅வேப்பந்தட்டை
⏩சிறுமலர் துவக்கப்பள்ளி, அன்னமங்கலம்,
✅ஆலத்தூர்
⏩ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கூடலூர்,

News September 17, 2025

பெரம்பலூர்: விவசாயத்திற்கு ₹1 கோடி வரை கடன் உதவி

image

பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் வங்கியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஓர் தனி விவசாயிக்கு ₹50 லட்சம் முதல் ₹ 1 கோடி வரை வழங்கப்பட உள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தகவல்!

image

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (17.09.2025) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் நடைபெற உள்ளது என, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 16, 2025

பெரம்பலூர் வருகை தர உள்ள சீமான்

image

பெரம்பலூர் நகராட்சி பகுதியான புதிய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தரஉள்ளார். சீமான் வருகையொட்டி நாம் தமிழர் கட்சியினர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!